உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அயர்லாந்தில் சிறுவர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்திய குடும்பம்

அயர்லாந்தில் சிறுவர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளான இந்திய குடும்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டப்ளின்: அயர்லாந்தில் பஸ் நிறுத்தத்தில் தனது 60 வயது தந்தையை இரண்டு சிறுவர்கள் இனரீதியான துன்புறுத்தல் மற்றும் தகாத நடத்தைக்கு ஆளாக்கியதாக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி, நிகழ்ந்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு டாக்ஸி டிரைவரும், ஆறு வயது சிறுமியும் தாக்கப்பட்டனர்.நாடு முழுவதும் உடல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rsru27hp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில், டப்ளினில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது 60 வயது தந்தையை இரண்டு சிறுவர்கள் இனரீதியான துன்புறுத்தல் செய்ததாக இந்திய வம்சாவளி பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து, இந்திய வம்சாவளி பெண் கூறியதாவது: 60 வயதான என் தந்தையை6 மற்றும் 7 வயதான சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டார், இதனால் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தோம். முதலில் சிறுவர்கள் எனது தந்தையுடன் செல்பி எடுக்கக் கேட்டனர், பின்னர் அவரை கேலி செய்யத் தொடங்கினர்.அவர்களில் ஒரு சிறுவன், தந்தையின் பாக்கெட்டிலிருந்து தனது பணப்பையை எடுக்க முயன்றார்.நாங்கள் அமைதியாக இருக்க முயற்சித்தோம், அவர்களின் நடத்தையைப் புறக்கணித்தோம். ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக, ஒரு சிறுவன் என் தந்தையை தொடர்ந்து தாக்கினார். தவறான நடத்தைக்கு குழந்தைகள் பொறுப்பேற்கக்கூடிய வகையில் சட்டங்கள் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Ramachandran
ஆக 10, 2025 21:48

ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்கள் சட்ட திட்டங்கள். அதை நாம் பின்பற்றியாக வேண்டும். இதே சிறுவர்கள் அந்த டீன் ஏஜெய் கடந்ததும் மிக நல்லவர்களாக பிறருக்கு உதவுபவர்களாக மாறி விடுகிறார்கள். இந்த மாதிரி நிகழ்வுகள் பெரும்பாலும் விசிட்டிங் சீனியர்களுக்கு ஏற்படுகிறது. அவர்களை அழைப்பவர்கள் சரியான வழி காட்டுதலை அவர்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். இந்த அசம்பாவத்தை தவிர்த்திருக்கலாம். நடந்து செல்லுமிடங்களுக்கு கூட்டமாகத்தான் செல்ல வேண்டும்.


Ramesh Sargam
ஆக 10, 2025 20:35

பாதுகாப்பில்லாத அயர்லாந்தில் அப்படியாவது இந்தியவர்கள் வசிக்கவேண்டுமா?


DUBAI- Kovai Kalyana Raman
ஆக 10, 2025 16:52

இது போல ரவுடி பயல் கள , அடிக்கணும் , பயந்துகிட்டு பேசாம இருந்த நமக்கு தான் பிரச்சனை ..குவைத் ல யும் same ப்ரோப்லேம் தான் ..இந்திய மக்களை டிஸ்டர்ப் பண்ணுவான்கள் ..பாகிஸ்தானிய இது போல யாரும் டார்ச்சர் பண்ண மாட்டார்கள் ..ஏன்னா பாகிஸ்தானிகள் இது போல டிஸ்டர்ப் பண்ற பசங்களை அடி பிச்சு புடுவான்கள் ..இந்தியன்ஸ் ம் , எப்போயும் , soft டா இருக்காம்மா ..அடி கொடுக்கணும் ..


Padmasridharan
ஆக 10, 2025 16:35

இந்தியர்களே வெளியேறுங்கள்.. வருவார்களா


தேசாந்திரி
ஆக 10, 2025 16:33

எத்தனை அயர்லாந்து காரர்கள் இங்கே வந்து வாழுறாங்க? ஒரு இடம் உடாம போய்க்கிட்டே இருந்தா? இங்கே வந்து நங்கூரம் போட்ட பிரிட்டி ஷ்காரனெல்லாம் போயே போயிட்டான்.


நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2025 15:37

வெள்ளைக்காரனிடம் அடிமையா இருக்க ஆசைப்படும் கருப்பு சட்டைகளே , உங்களின் ரியாக்ஷன் ?


ருத்ரன்
ஆக 10, 2025 14:14

மர்மதேச சிறுவர்கள் போல நடந்து கொள்கிறார்களே. சில ஆப்ரிக்க நாடுகளில் கூட இவ்வாறு நடப்பதுண்டு.


M Ramachandran
ஆக 10, 2025 13:44

அயர்லாந்து அரசு சிறுவர்கள் டீன் எஜர்ஸ் எது செய்தாலும் கேள்வி முறை கிடையாது. அதுவும் இப்போது பள்ளி விடுமுறை என்பதால் சுற்றி திரிவார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியை தவிர மற்ற பகுதிக்கு செல்ல கூடாது. சமீபத்தில்நான் சென்ற மாதத்தில் அயர்லாந்தில் தங்கி யிருந்தேன். உறவினர்கள் அறிவுறுத்தல் பேரில் மெயின் காம்ப்லெஸ் செல்லும் வழி கள் மற்றும் மற்ற அரவமற்ற பகுதிக்களை தவிர்க்க வேண்டும். கிராமம் போன்ற பகுதிகளில் இந்த பிரச்சனை வருவதில்லை. நெருங்கிய நகர் புறங்களில் தவிர்க்க வேண்டும். வியாபாரா ஸ்தலங்ககளிலும் பிரச்னையிருப்பதில்லை. நடைபயிற்சியை மேற்கொண்டிருக்கிரேன் கிராம தெருக்களில். வீடுகள் அப்பார்ட்மெண்ட் க்களில் வெளி கேட் செகுயுரிட்டி லாக் இருக்கும் மற்றும் வீட்டு மெயின் கதவை எப்போனதும் பூட்டி வைத்தேனா இருக்க வேண்டும். அப்படி மெயின் கேட் திறக்கும் போனது சில சமயம் சிறுவர்கள் புகுந்து விடுவார்கள். உடனே அந்த அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு டீன் ஏஜெர்ஸ் உள்ளே புகுந்துள்ளார்கள் என்று தெரிவித்து கொள்வார்கள். வீட்டில் புகுந்து விட்டாலோ லங்கா தகனம் தான். டிவி மற்றும் பொருட்களை உடைத்து விடுவார்கள்.


Ram
ஆக 10, 2025 13:41

இந்த மாதிரியான சிறுவர்களை அங்கேயே போட்டுத்தள்ளவேண்டும்


Barakat Ali
ஆக 10, 2025 13:36

[இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.] இந்த எச்சரிக்கை போதுமா ???? அயர்லாந்து அரசுக்கு கண்டனம் கூட தெரிவிக்க வேண்டாமா ???? இந்திய வெளியுறவுத்துறை என்ன செய்கிறது ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை