உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, அமெரிக்கா சென்ற 24 வயது இளம்பெண் மாயமானது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, கடந்த 20ம் தேதி இந்தியாவில் இருந்து சிம்ரன், 24, என்ற இளம் பெண் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.கடந்த 25ம் தேதி அவர் மாயமாகி விட்டார். எங்கு சென்றார், யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கடைசியாக இருந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அவர் செல்போனை பயன்படுத்தியபடி, யாருக்கோ காத்திருந்தது தெரிய வந்தது. மேலும், சிம்ரனுக்கு ஆங்கிலம் பேச தெரியாது என்றும், அமெரிக்காவில் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அவர் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் அமெரிக்கா வரவில்லை, வேறு காரணத்துக்காக வந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.மர்மமான முறையில் இளம் பெண் மாயமாகி இருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சிம்ரன் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.இதேபோல, அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி சுதிக்ஷா கோனான்கி என்பவர் டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது மாயமானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramaraj P
ஜூன் 30, 2025 14:28

இந்த பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற செய்தியும் வெளிவருகிறது.


visu
ஜூன் 29, 2025 22:23

கல்யாணம் செய்து கொள்ளும் காரணத்துக்காக அவ்வளவு சுலபமாக அமெரிக்கா விசா கொடுத்து விடுமா அதுவும் அங்க யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற விவரம் கூட இல்லாமல்


Ramesh Sargam
ஜூன் 29, 2025 19:46

சிம்ரன்,பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் சிக்கிக்கொண்டிருப்பார்


Barakat Ali
ஜூன் 29, 2025 18:44

தாலியைக் கழற்றாமல் இருந்தார் அந்த சிம்ரன் .... இந்த சிம்ரன் ????


Venkat T
ஜூன் 29, 2025 18:21

Women trafficking


sasikumaren
ஜூன் 29, 2025 18:16

ஏதோ கதை விடுகிறார்கள் நாமும் நம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 29, 2025 16:28

இந்த சிம்ரனுக்கு விசா எப்படி கிடைத்தது ?


Yasararafath
ஜூன் 29, 2025 16:28

இரண்டு பெண்களும் கடத்தி வேலைகளில் பயன்படுத்தபடுகின்றனர்.


நிவேதா
ஜூன் 29, 2025 16:18

என்ன சிம்ரன் இதெல்லாம் ?


Padmasridharan
ஜூன் 29, 2025 16:16

சாகறதுக்கு இந்திய நாட்டில் உள்ள தங்கள் குடும்பங்களை விட்டு அவ்வளவு தூரம் செல்லவேண்டிய அவசியம் இல்லையே சாமி. அவங்க வேணும்னே இந்தியர்களை குறிவைத்துள்ளனர் என்பதை எப்பொழுது அறிவார்கள் நம்மாட்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை