உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை

ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி:ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hsds2pxa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடிலெய்டு நகரத்தின் முக்கிய பகுதியான கின்டோர் அவின்யூ என்ற இடத்தில் சரண்ப்ரீத் சிங் என்பவர் தமது காரில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர், அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். வலி தாங்க முடியாத அவர், அங்கேயே மயங்கி சரிந்தார்.பின்னர், சரண்ப்ரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தின் பல இடங்களில் கொடூர காயங்கள், எலும்பு முறிவு ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வரும் நிலையில் இதுதொடர்பான விசாரணை தொடங்கிய போலீசார், சந்தேகத்தின் பேரில் வாலிபரை கைது செய்துள்ளனர். உடன் இருந்த மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இனவெறி தாக்குதலாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இந்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தாக்குதலை அறிந்த அங்கு வாழும் இந்தியர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருவதோடு அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 19:38

இந்தியா என்ற சொர்க்கபுரி இருக்கும்போது,வெளிநாட்டு மோகம் ஏன்? அடுத்தவன் நாட்டில் ரொம்ப பீற்றினால், அடிமையாக அடிவாங்கி சாக வேண்டியது தான்.


kumarkv
ஜூலை 23, 2025 17:43

வெளிநாடுகளில் இந்தியருக்கு இனவெறி தாக்குதல். இந்தியாவில் ஞானசேகரன், சார் தாக்குதல்


Barakat Ali
ஜூலை 23, 2025 16:39

இந்தியா உடனடியாக கண்டனம் தெரிவித்து விசாரணை முடிவு குறித்து அறிய விருப்பம் தெரிவிக்க வேண்டும் ........


Senthoora
ஜூலை 23, 2025 18:02

முதலில் தர்மஸ்தலாவில் நடந்ததுக்கு விசாரணை செய்ய சொல்லுங்க.


புதிய வீடியோ