உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மோசடியை வெளிப்படுத்திய இந்தியர் தற்கொலை

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் மோசடியை வெளிப்படுத்திய இந்தியர் தற்கொலை

நியூயார்க்:ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மிகப் பெரும் நிறுவனமான ஓபன் ஏ.ஐ., மோசடி செய்வதாக பகிரங்கமாக புகார் தெரிவித்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய மென்பொருள் இன்ஜினியரான சுசிர் பாலாஜி, 26, அவரது வீட்டில் தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்தும், உலகின் மிகப் பெரும் நிறுவனமாக, அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., உள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, சாட் ஜி.பி.டி., உட்பட பல புதிய தகவல் பரிமாற்ற முறைகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்த நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர், இந்திய வம்சாவளியான சுசிர் பாலாஜி. இவர், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக, பல புதிய வகை தகவல் பரிமாற்ற முறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், கடந்த அக்., மாதம் அவர், நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்; ஓபன் ஏ.ஐ., நிறுவனம் மிகப் பெரும் மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு சுசிர் பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தன் வீட்டில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவ., 26ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவருடைய வீட்டில் சோதனையிட்டனர்.உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். உடலில் காயங்கள் ஏதுமில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.ஓபன் ஏ.ஐ., நிறுவனத்துக்கு எதிராக பகிரங்கமாக புகார் தெரிவித்த நான்கு மாதங்களில், சுசிர் பாலாஜி தற்கொலை செய்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புகார் என்ன?

கடந்த அக்டோபரில் அளித்த பேட்டியில் சுசிர் பாலாஜி கூறியதாவது:ஓபன் ஏ.ஐ., நிறுவனம், காப்புரிமை சட்டத்தை வெளிப்படையாக மீறுகிறது. இணையதளத்தில் இருந்து காப்புரிமை பெற்ற தகவல்களையும் தன் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியுள்ளது.இந்த மோசடியால் பல நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளன. அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் உள்ளதால், இந்த தொழில்நுட்பம் நீண்ட காலம் நீடிக்காது.நான் நம்புவதை நீங்களும் நம்பினால், உடனடியாக இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறுங்கள் என, அங்கிருக்கும் ஊழியர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, இணையதளங்களில் உள்ள பொதுவான தகவல்களையே நாங்கள் பயன்படுத்தியுள்ளோம் என, ஓபன் ஏ.ஐ., நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
டிச 15, 2024 10:54

இது தொடர்பாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு சுசிர் பாலாஜி பேட்டி அளித்திருந்தார்.. ஏன் போலீஸ், ஸைபர்க்ரைம் என்று போகவில்லை? நீங்களும் எங்க அண்ணாமலை ஆயிட்டதா நினைப்பா?


Duruvesan
டிச 15, 2024 09:30

ரமேஷ் சார், சாதிக் சார், நினைவு வருகிறது


பேசும் தமிழன்
டிச 15, 2024 09:00

நன்றாக விசாரியுங்கள்..... கொலையாக இருக்கப் போகிறது..... ஏற்கெனவே அமெரிக்க நிறுவனத்தின் தில்லுமுல்லுகளை வெளியே சொல்லி இருக்கிறார்.... அதனால் தான் சந்தேகம் வருகிறது.


Nandakumar Naidu.
டிச 15, 2024 00:30

இது அமெரிக்காவின் திட்டமிட்ட கொலை. அமெரிக்கா இந்த பாவத்திற்கு அனுபவித்தே ஆகவேண்டும்.


SANKAR
டிச 14, 2024 23:39

why such a brilliant young man commit suicide? must have used his brain to punish the guilty.


புதிய வீடியோ