உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலி இன்சூரன்ஸ் மூலம் ரூ.1,282 கோடி மோசடி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது

போலி இன்சூரன்ஸ் மூலம் ரூ.1,282 கோடி மோசடி; இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது

லாஸ் ஏஞ்சல்ஸ்: போலி இன்சூரன்ஸ் மூலம் ரூ.1,282 கோடி மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் சாவரின் ஹெல்த் குரூப் என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நடத்தி வருபவர் டன்மாய் ஷர்மா,61. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மனநல மருத்துவராக திகழ்ந்து வரும் இவர், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியை பூர்வீகமாக கொண்டவராவார். இவர் தெற்கு கலிபோர்னியாவில் போதை மறுவாழ்வு மையங்களை நடத்தி வந்துள்ளார். சர்மாவின் சாவரின் ஹெல்த் குரூப் நிறுவனம், நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் காப்பீட்டுத் திட்டங்களை பதிவு செய்து, ரூ.1,282 காப்பீட்டுத் தொகையை பெற விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் ரூ.180 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் கீழ், அவரது வீடு மற்றும் மருத்துவ மையங்களில் எப்.பி.ஐ., சோதனை நடத்தியது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தொழிலதிபர் டான்மாய் ஷர்மாவை அதிகாரிகளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராஜா
ஜூன் 05, 2025 23:30

வடக்கன்ஸ் பாய்ஸ் பிராடு எங்க போனாலும் குறையாது போல..


Apposthalan samlin
ஜூன் 05, 2025 10:09

அதானியோட தம்பியா இருபாரோ ?


Barakat Ali
ஜூன் 05, 2025 14:34

அசிங்கப்படுங்கள் அடிமைகளே ...


Padmasridharan
ஜூன் 05, 2025 09:38

இந்தியர்கள் எங்கு சென்றாலும் மத்தவங்கள ஏமாத்தி ஊழல், மோசடி பண்றதுல குறியாய் இருக்காங்க.. வீட்டு, நாட்டு மானத்தை காற்றில் பறக்க விடும் இலஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள்.. வாழ்க சிறையில்


அப்பாவி
ஜூன் 05, 2025 09:04

நம்மாளுங்க அமெரிக்கா போய் சாதிக்கிறாங்க.


Barakat Ali
ஜூன் 05, 2025 09:38

அமெரிக்கா போகாமையே இங்கேயே சாதிக்கிறது என் மாப்ளேதான் ....


a
ஜூன் 05, 2025 08:25

வம்சாவழி என்பதே சரியான சொல். அது போல் நபரின் பெயர் தன்மை (அல்லது தன்மோய்) ஷர்மா


புதிய வீடியோ