உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கயிறு இழுக்கும் போட்டியில் சீனாவை மண்ணைக் கவ்வ வைத்த இந்திய வீரர்கள்

கயிறு இழுக்கும் போட்டியில் சீனாவை மண்ணைக் கவ்வ வைத்த இந்திய வீரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கார்மூம்: சூடானில் ஐ.நா.,வின் அமைதிப்படையில் ஈடுபட்டுள்ள இந்திய சீன வீரர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்கள் வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8u22aekc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வீடியோவில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற கடுமையான முயற்சி செய்கின்றன. நட்பு ரீதியில் நடந்த போட்டியில் உடல் வலிமை மற்றும் ஒரே அணியாக செயல்பட்ட இந்திய வீரர்கள் வெற்றியை உறுதி செய்தனர். இரு அணி வீரர்களையும், அந்தந்த நாட்டின் ஆதரவாளர்கள் உற்சாகப்படுத்தினர். இந்திய வீரர்கள் வெற்றி பெற்றதும், ' இந்தியா.. இந்தியா...' உற்சாகமாக முழங்கினர். வைரலாகும் இந்த வீடியோவின் உறுதித்தன்மையை இந்திய ராணுவமும் உறுதி செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bakavathi
மே 30, 2024 11:04

இந்தியா தவறு செய்துவிட்டது என்று காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியம் இல்லை


Venkatasubramanian krishnamurthy
மே 29, 2024 16:15

இந்த செய்தி மணிசங்கர் அய்யரின் கவனத்திற்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் சீனாவின் தோல்வியென கட்டுக்கதையென சொல்லப்படுகிறது என சொல்லிவிடுவார். சீனாவின் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாத காங்கிரஸ் கூட்டம்.


Palanisamy Sekar
மே 29, 2024 16:03

இப்படிப்பட்ட செய்திகளை தேடிப்பிடித்து போடுவதால் இங்கே தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கு முகத்தில் சோகம் அப்பிக்கொள்கின்றது. அதன் தொண்டர்களுக்கு இதனால் கடுப்பு அதிகமாகி கோவித்துக்கொண்டு போய்விடுவார்கள்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ