உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவர் கொலை: கனடாவில் கொடூரம்

இந்திய மாணவர் கொலை: கனடாவில் கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒன்டாரியோ: கனடாவில் படித்து வந்த 22 வயதான இந்திய வம்சாவளி மாணவரை, அவருடன் தங்கியிருந்த நபர் கத்தியால் குத்தி, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின் சர்னியா நகரில் உள்ள ஒரு வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குராசிஸ் சிங், 22, தங்கி இருந்தார்.இவர், அங்குள்ள லாம்ப்டன் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வணிக மேலாண்மை படித்து வந்தார்.இவருடன், ஹன்டர் என்பவரும் அதே அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி தங்கள் அறையின் சமையல் அறையில் இருந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது. அப்போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்த ஹன்டர், குராசிஸ் சிங்கை பலமுறை குத்தினார். இதில் படுகாயமடைந்த குராசிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், குராசிஸின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; கொலை செய்த ஹன்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
டிச 08, 2024 04:51

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நிறைய இளைஞர்கள் மாணவர்கள் என்ற பெயரில் பஞ்சாபிலிருந்து கொண்டுவரப்படுகின்றனர். இவர்கள் போதைப்பொருட்களை விநியோகம் செய்வதும், காலிஸ்தானுக்கு ஆதரவாக ரவுடித்தனம் செய்வதும் மற்ற கனடியரகளை முகம் சுளிக்க வைக்கின்றன. இந்த பயங்கரவாத சீக்கிய கும்பலினால் மற்ற இந்தியர்களுக்கும் கேட்ட பெயர், எல்லா இந்தியர்களும் இப்படித்தான் என்று. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரம் போல, டொரோண்டோ அருகில் உள்ள ப்ராம்ப்டன் என்ற நகரமும் காலிஸ்தான் கும்பலால் நிறைந்த பகுதி. மற்ற கனடியார்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள். இதில் கேவலம் என்னவென்றால், பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஆதரவுடன்தான் இவர்கள் செயல்படுகிறார்கள். எண்ணத்தை சொல்ல? சென்றமுறை பிரதமர் ஜஸ்டின் டுரூடோ G20 மாநாட்டிற்கு இந்தியா வந்தபோது அவர் வந்த விமானம் கோளாறு என்று சிலநாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதால்தான் நிறுத்திவைக்கப்பட்டது என்று வதந்தி. உள்ளே நோண்டினால் உண்மை வெளிவரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை