உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்

அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு மாறும் இந்திய மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலையில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு விசா கட்டுப்பாடுகளை விதித்து விண்ணப்பங்களை வடிகட்டுவதால், இந்திய மாணவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாக மாணவர் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள்.இந்த எண்ணிக்கை, மூன்றாண்டுகளில் இல்லாத அளவு தற்போது சரிவை சந்தித்துள்ளது.விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தரவுகளை விரிவாக ஆய்வு செய்வதால், விண்ணப்ப செயலாக்கத்திற்கு காலதாமதமாகிறது. அதன்பின், படிப்பு முடிந்தவுடன் சொந்த நாடு திரும்புவோம் என்பதை நிரூபிக்க போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி, பெரும்பாலான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.இதனால், அமெரிக்க பல்கலைகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.இதுபோன்ற காரணங்களால், இந்திய மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கு ஆலோசனை நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர். ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகம் பேர் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூலை 19, 2025 16:43

இந்தியாவில் இல்லாத சிறந்த கல்வி நிலையங்களா? அப்துல் கலாம் வெளிநாடு சென்றா படித்தார்?


கண்ணன்
ஜூலை 19, 2025 09:52

ஐரோப்பிய நாடுகளில் பல சிறாய நாடுகள் உள்ளன அங்குள்ள மொழியையும் கற்க வேண்டும். நான் இங்கிலாந்தை உரோப்பிய நாடாக கருதவில்லை . மற்றபடி அப்பாவிகளுக்கு எந்த செய்தியும் புரியாது


அப்பாவி
ஜூலை 19, 2025 06:13

உள்ளூரில் ஊருக்கு.ஒரு ஐ.ஐ.டி, மாவட்டத்துக்கு எய்ம்ஸ் இருக்கே கோவாலு. அப்பிடியும் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறாங்க.


visu
ஜூலை 19, 2025 07:21

கும்மிடிப்பூண்டி தாண்டி இந்தியா இருக்கு


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 19, 2025 08:01

கோட்டா கோவாலு, கோட்டா. அது இருக்கும்வரை மேலும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் போய்க்கொண்டேதான் இருப்பார்கள். இப்போது வெளிநாடுகளில் இருக்கும் முதல் தலைமுறையினர் இந்தியாவின் மீது பற்றுடன் இருப்பர். மோடி போல வெளிநாடு போய் கெஞ்சினால் பிறந்த நாட்டிற்கு கொஞ்சம் ராஜாங்க உதவியும், இந்தியாவில் முதலீடும் செய்வார். அடுத்த அடுத்த தலைமுறை வாரிசுகள் திரும்பிக்கூட பார்க்காது. திறமையும், செல்வமும் கை நழுவி போய்கொண்டு இருக்கிறது. கோட்டா என்பது இந்தியா தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 10:36

கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. இவைகள் எல்லாம் அப்பாவிகளுக்கு தெரிவதில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்.


Ganapathy
ஜூலை 19, 2025 11:53

உமது கருத்துகளைப் பார்த்தால் "சமத்துவ சமூக கல்வியை" நன்கு கற்று தேர்ந்த அறிஞர் என விளங்குகிறது.


Natarajan Ramanathan
ஜூலை 19, 2025 06:12

எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிரிட்டன் வேண்டவே வேண்டாம். மிகவும் கேவலமாக போய்க்கொண்டு இருக்கும் ஒரு நாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை