உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் நடுத்தர வர்க்கம் நமக்கான பெரும் வாய்ப்பு

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் நமக்கான பெரும் வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : இந்தியாவுக்கான புதிய அமெரிக்க துாதராக அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்துள்ள செர்ஜியோ கோர், 'இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் உள்ள நடுத்தர வர்க்கம், அமெரிக்க சந்தைக்கான மிகப்பெரும் வாய்ப்பு' என கூறினார். இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டி இருந்தார். இவர், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டவர். இந்தாண்டு ஜனவரி 20ல் டிரம்ப் அதிபரானதும், இவர் பதவி விலகினார். https://www.youtube.com/embed/vVtt2PUnQRg

உறவில் விரிசல்

இதையடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் பதவி காலியாக இருந்தது. தற்போது இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகியுள்ளது. இந்த சூழலில், இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக செர்ஜியோ கோர் என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்தார். இவர், டிரம்பின் முன்னாள் ஆலோசகர் மற்றும் அவரது பிரசாரத்துக்கு நிதி திரட்டியவர். அமெரிக்க அரசியலமைப்புபடி அதிபரால் துாதராக தேர்வு செய்யப்படுவோர், அந்நாட்டு பார்லிமென்டின் வெளியுறவு குழு முன் ஆஜராகி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்நிலையில் நேற்று கூடிய வெளியுறவு குழு கூட்டத்தில், அத்துறையின் அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான துாதர் செர்ஜியோ கோரை அறிமுகப் படுத்தினார்.

அவர், குழு முன் பேசியதாவது:

நம் அதிபருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே ஆழமான நட்பு உள்ளது. இது தனித்துவமானது. அதிபர் டிரம்ப் வரி விவகாரத்தில் வேறு நாடுகளை தாக்கும்போது, அவற்றின் தலைவர்களையும் தாக்கி பேசினார். ஆனால், இந்தியாவை விமர்சித்த அதே வேளையில் மோடியுடனான தனிப்பட்ட நட்பு குறித்து பாராட்டினார்.

வாய்ப்பு

இந்தியா - அமெரிக்கா இடையே தற்போது நடக்கும் வர்த்தக பேச்சுகள் மூலம் நம் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்களை இந்தியா வாங்கும் என நம்புகிறோம். இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி. அதில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் அளவே, அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். நம் சந்தையை அங்கு விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மையப்புள்ளி இந்தியா

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக தேர்வு செய்யப்பட்டுள்ள செர்ஜியோ கோரை அறிமுகப்படுத்தி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசுகையில், ''இந்த 21ம் நுாற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இந்தியா - பசிபிக் பெருங்கடல் பகுதி நாடுகள் உள்ளன. அதில் மையப்புள்ளியாக இந்தியா உள்ளது. நமக்கும், இந்தியாவுக்கும் சில முக்கியமான பிரச்னைகள் உள்ளன. அவற்றை பேசி தீர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த பணிக்கு இந்திய துாதராக தேர்வு செய் யப்பட்டுள்ள செர்ஜியோ கோர் சிறந்தவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

chinnamanibalan
செப் 13, 2025 19:32

ஒருபக்கம் இந்தியா மீது 50 சதவீதம் அநியாய வரி விதிப்பு, மறுபக்கம் இந்தியாவில் வியாபாரத்தை பெருக்கி நமது பணத்தை அள்ளிச் செல்ல முயற்சி. அமெரிக்காவின் இந்த விபரீத ஆசைக்கு இந்திய மக்கள் நிச்சயம் முற்றுப் புள்ளி வைப்பார்கள்.


Barakat Ali
செப் 13, 2025 09:23

இந்தியாவை யூஸ் அண்ட் த்ரோ செய்ய மோடி விடமாட்டார் .......


பேசும் தமிழன்
செப் 13, 2025 07:28

இந்திய மக்கள் அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கும் நேரம் வந்து விட்டது...... இனிமேல் அமெரிக்கா மெல்ல சாகும்......உங்கள் டால‌ர்.... போயே போச்சு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 13, 2025 07:20

ஆமாம் ஆமாம். நாங்கெல்லாம் வெள்ளக்காரன் வருவான் காசு கொடுக்கணும்னு வரிசைல நிக்கிறோம். சீக்கிரம் வாங்கப்பு. போவியா. இந்தியால உங்க டங்குவாரு அந்துபோயி மாசமாச்சு. நான் இப்போது கூகுள் பே பயன்படுத்துவதை குறைத்து, கனரா வங்கியின் மொபைல் பேங்கிங் ஆப்பில் உள்ள யுபிஐ ஆப்ஷனை நேரடியாக பயன்படுத்துகிறேன். இனி எப்போதும் அப்படித்தான்.


KRISHNAN R
செப் 13, 2025 07:17

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.., அரசியல் ஊழல் நம் நாட்டை இவன் கொள்ளை அடிக்க விட முடியாது... அரசியல் கட்சிகள்... எல்லாம் ஒரே மண்ணு தான்


Moorthy
செப் 13, 2025 06:20

அமெரிக்கன் சேல்ஸ் மேனேஜர் , இந்தியாவின் கிளைக்கு நியமனம் இவர் புது டெல்லி வரும்போதே பையில் பால் பாக்கெட் மற்றும் முதுகில் விதை மூட்டைகளை சுமந்து வருவார் , இந்தியாவில் விற்பனை செய்ய


KRISHNAN R
செப் 13, 2025 10:57

வெஸ்ட் டார்ஜெட்.. இந்தியா.. காரணம்.. உலகில் பல நாடுகளில் விற்று கிடைக்கும் துட்டு இங்கே ஈசியா கிடைக்கும்..அதான்


K.Ravi Chandran, Pudukkottai
செப் 13, 2025 06:03

இவ்வளவு பெரிய வாய்ப்பு இங்கு இருக்கும் போது அப்புறம் எதற்கு இந்த உருட்டல், மிரட்டல்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை