உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்

இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது: இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும். ரஷ்ய எண்ணெய் காரணமாக இந்தியாவின் மீதான வரிகள் அதிகமாக உள்ளன. இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புகிறோம். பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு உள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன். மிக முக்கியமான சர்வதேச உறவுகளை செர்ஜியோ வலுப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். எரிசக்தி ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை பாதுகாக்க உதவுவார். அமெரிக்க தொழில்கள், தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

ஆவலுடன் இருக்கிறேன்!

இந்தியாவிற்கான அமெ ரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோர் கூறியதாவது: அமெரிக்காவுக்கான சிறந்த பணியை செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்த காத்திருக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sridhar
நவ 11, 2025 13:26

அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிக்கொண்டிருந்த பொருட்கள் எல்லாம் இப்போ வேறு சந்தைகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன. ஆகவே, குறைச்சிக்கோ இல்ல கூட்டிக்கோ ஆனா உன் பொருட்களுக்கு இந்திய விதிக்கும் வரிகள் அதிகமாகத்தான் இருக்கும்னு சொல்லிடனும்.


நிக்கோல்தாம்சன்
நவ 11, 2025 13:04

மிரட்டல் அதட்டல் அடக்கியாளுதல் எல்லாம் அரபு சுல்தான்களோடு போகட்டும் என்று ருந்தால் இப்போ வெள்ளைக்காரர்களின் வேற லெவல் ஆட்டம்


அப்பாவி
நவ 11, 2025 12:22

அக்டோபர் மாசம்.மட்டும் ஒருநாளைக்கி 480000 பீப்பாய் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆயிருக்காம். ட்ரம்புக்கு தாங்க முடியாத சந்தோஷம். அதான் வரி குறைப்பு.


ديفيد رافائيل
நவ 11, 2025 11:19

அமெரிக்க தேர்தலின் படுதோல்வி காரணமாக டிரம்ப் தன்னுடைய தவறை உணர வாய்ப்பு கிடைச்சிருக்கு. எவனாவது இவனுக்கு டிரம்ப் அறிவுரை சொல்லியிருப்பானோ?


raju
நவ 11, 2025 10:02

இத்துணை நாட்களாக வரி போட்டு தொழிலை நாச படுத்தி விட்டார்கள். இங்கு சில நாதாரிகள் ..இந்தியாவிடம் பலிக்குமா என்று ஊளை இடுகிறார்கள் இந்த 15 லட்சம் போல அங்கும் 1.7 லட்சம் மக்களுக்கு கொடுக்கிறார்கள் .இரண்டும் .. ...ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


angbu ganesh
நவ 11, 2025 09:32

ராகுல் எங்கிருந்தாலும் ஒடனே வரணும் எப்படி டிரம்ப் இந்தியாவுடன் இப்படி நல்லுறவு வைக்க விரும்பலாம் ஏதாச்சும் ஒலருவியே வா வந்து கொஞ்சம் ஒலரிட்டு போ


duruvasar
நவ 11, 2025 09:16

டெட் எகானாமியுடன் உனக்கு என்ன வர்த்தக உறவு வேண்டிக்கிடக்கிறது. ட்ரம்ப் ஐயா இன்னும் திருமண நிகழ்சிகளில் கலந்துகொண்டு ஒழிப்பது அழிப்பது போன்ற மங்களகரமாக பேச கற்றுகொள்ளவேண்டும். முரசொலி படியுங்கள். இன்னும் சிறப்பாக செயல் படமுடியும்


Yaro Oruvan
நவ 11, 2025 08:48

எதிர் கருத்துக்கள் நக்கல் தேவை இல்லை. நாட்டுக்கு நல்லது என்றால் போதும் .. உணர்ச்சி வசப்பட தேவை இல்லை. இந்திய இறையாண்மையை பாஜக ஒருபோதும் விட்டு கொடுக்காது ... அவர்களாகவே ஆரம்பித்தார்கள் அவர்களாகவே முடித்து வைப்பார்கள் .. நாம் நாமாகவே இருப்போம் ..


RAJ
நவ 11, 2025 08:15

அமெரிக்கானா முன்னாடி எல்லாம் ஒரு மரியாதை இருந்துச்சி ... தாத்தா வந்தபிறகு... பாகிஸ்தானை தவிர... ஒன்றுகூட மதிப்பது இல்லை.


VENKATASUBRAMANIAN
நவ 11, 2025 08:06

அப்படி வா வழிக்கு. யார்கிட்ட மோடியிடம் நடக்குமா. பேசாமலே காரியத்தை சாதித்து உள்ளார். ராகுல் இப்போதாவது புரிகிறதா. மலையுடன் மோதினால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை