உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபருடன் மோதல்: உளவுத்துறை இயக்குநர் ராஜினாமா

அமெரிக்க அதிபருடன் மோதல்: உளவுத்துறை இயக்குநர் ராஜினாமா

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் விவகாரத்தில், அதிபர் டொனால்டு டிரம்பின் கொள்கைகளை விமர்சித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தவர் துளசி கப்பார்டு. அமெரிக்கராக இருந்தபோதும்,ஹிந்து மதத்தின் மீதான ஈடுபாட்டால் அதை பின்பற்றி வந்தார். ஈரான் மீதான போர் விவகாரத்தில் அதிபர் டிரம்பின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்நிலையில், தன் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். வரும் ஜூன் 30 முதல் இவரின் ராஜினாமா அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. தன் கணவர் ஆபிரகாம் வில்லியம்சுக்கு மிகவும் அரிதான ஒரு வகை எலும்பு புற்றுநோய் இருப்பதால், அவருக்கு ஆதரவாக இருப்பதற்காக பதவியில் இருந்து விலகுவதாக துளசி கப்பார்டு கூறியுள்ளார். இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போர் மற்றும் வெளியுறவு கொள்கையுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகளே அவர் பதவி விலகியதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. துளசிக்கு பதிலாக, தேசிய உளவுத்துறையின் முதன்மை துணை இயக்குநரான ஆரோன் லுகாஸ் தற்காலிக இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி