உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி: ராணுவம் உறுதி

வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி: ராணுவம் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அங்கு ராணுவ ஆட்சி அமலாகி உள்ளது.ஷேக் ஹசீனா வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.இச்சூழ்நிலையில் அந்நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. பிறகு அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஆக 05, 2024 19:45

வங்கதேசத்தில் நடக்கும் விஷயங்களை நம் நாட்டில் ஒருவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார் என்றால், இன்று இதுவரையில் அவர் நமது பிரதமர் மோடிஜியை பற்றியும், மத்திய அரசைபற்றியும் குறைகூறவில்லை. அவர் யார் என்று தெரிந்தவர்கள் தாராளமாக கூறலாம்.


Ms Mahadevan Mahadevan
ஆக 05, 2024 17:59

பங்களா தேஷ் மக்களை எல்லாம் வல்ல அந்த கடவுள்/ அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்


Ramesh Sargam
ஆக 05, 2024 20:15

அல்லாஹ்வின் அறிவுரைகளை அவர்கள் செவிமடுப்பதில்லை. குர்ஆனில் கூறி உள்ளதை அவர்கள் நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.


theruvasagan
ஆக 05, 2024 16:34

மார்க்க நாடுகளில் ஜனநாயகம் என்பது நீர்க்குமிழியின் ஆயுள் போன்றது என்பது பலமுறை நிரூபணம் ஆகிவிட்டது.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 16:32

இறைவனுக்கு மட்டுமே அடிபணிவோம் என நினைப்பவர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் கூட பணிவதில்லை.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 16:32

இஸ்லாமிய நாடுகளுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகுதூரம். சம்பந்தமில்லை என்றே கூறலாம். முன்பு ராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகள் இந்தத் தலைமுறை அறியாதது. ராணுவத் தலைமை மதத் தலைவர்களை கேடயமாக வைத்து ஏமாற்றி சுரண்டுவர்


nagendhiran
ஆக 05, 2024 16:22

சலுகை என்றாலே பிரச்சனைதான்?


Shekar
ஆக 05, 2024 15:55

இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை