உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை

சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மெக்சிகோ சிட்டி: போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடந்த தகராறில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன், வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுட்டுக்கொல்லப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த மார்கோ எப்பன், 32, சர்வதேச போதை பொருட்கள் கடத்தும் கும்பல்களில் முக்கியமானவர். கடந்த, 2014ல், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து நெதர்லாந்துக்கு 'கோகைன்' கடத்திய வழக்கில் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, தலைமறைவானவர்.இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு புலனாய்வு அமைப்பான, 'ஈரோபோல்' அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது. நெதர்லாந்தில் இருந்து தப்பிய அவர் துபாய், ரஷ்யா, இத்தாலி, துருக்கி, மெக்சிகோ போன்ற நாடுகளில் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தகராறில், மார்கோ எப்பன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள அடிஜாபன் டே ஜராகோஸா என்ற இடத்தில் கார் பார்க்கிங் பகுதியில், மார்கோ எப்பன் சடலம் கிடந்தது. அவரது உடலில் 15 குண்டுகள் பாய்ந்திருந்ததாக மெக்சிகோ போலீசார் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த ஹம்பர்டோ ரிவைரோ என்ற போதைக்கடத்தல் மன்னனை மெக்சிகோ போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, போதைக் கடத்தல் கும்பல்களுக்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் மார்கோ எப்பன் கொல்லப்பட்டதாக மெக்சிகோ போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
பிப் 16, 2025 12:46

சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை. இதற்கு வருத்தம் தெரிவித்து தமிழக அரசு இன்று மவுன ஊர்வலம் மேட்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தமிழகம், இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம்.


Kasimani Baskaran
பிப் 16, 2025 07:28

தென் அமெரிக்கா போதைப்பொருள்கள் உற்பத்தியில் டாப். மெக்ஸிகோ வழியாக கடத்தி அமெரிக்காவுக்குள் போதை வஸ்துக்கள் அனுப்பப்படுகிறது. கொள்ளை லாபம் என்பதால் பல கூட்டங்கள் இதை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். எங்கள் நிறுவனத்துக்கு ரெய்னோசவின் உற்பத்திப்பிரிவு உண்டு. ஆள் கடத்தல், குண்டர் கூட்டத்துக்கு பயந்து தனி பாதுகாப்பு நிறுவனத்தில் உதவியில் மெக்ஸிகோவில் தங்காமல் மெக்காலேநில் தங்கி தினமும் அமெரிக்க எல்லையை கடந்து போய்வரும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் மெக்ஸிகோவில் உள்ள குண்டர் கும்பல் எங்கள் பொறியாளர்களை கடத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தினர் 3 மில்லியன் டாலர் பிணைத்தொகை கொடுத்து மீட்டிருக்கிறார்கள். ஆபத்தான இடம். திராவிட அயலக அணிகளை அடக்கி வைக்கவில்லை என்றல் மெக்ஸிகோ போல ஆகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை