UPDATED : ஜூன் 18, 2025 10:43 AM | ADDED : ஜூன் 17, 2025 07:44 PM
வாஷிங்டன்: ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் திறன் தொடர்பாக இஸ்ரேல் அமெரிக்கா இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. இன்னும் இரண்டரை நாட்களில் ஈரான் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை அதற்கு இன்னும் 3 ஆண்டு ஆகும் என கணித்துள்ளது.ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. தங்கள் நாட்டை பரம எதிரியாக கருதும் ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது. இதில் 225க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், அணுஆயுதங்களை ஈரான் வேகமாக தயாரித்து வருகிறது. அடுத்த ஒரு மாதங்களில் தயாரித்துவிடும் என இஸ்ரேல் கூறியிருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xew6v1zu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறை இதற்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானின் அணு ஆயுதத் திட்டம் இன்னும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையானது அனைத்தும் ஈரானுக்கு தேவைப்படுகிறது எனத் தெரிவித்தார்.இதன் காரணமாகவே, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இது ஈரானின் அணுகுண்டு திறன் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடான இஸ்ரேல் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளதை காட்டுகிறது.
எச்சரிக்கை
இதனிடையே, ஈரானின் அணுகுண்டு திறன் தொடர்பாக போர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமெரிக்க அரசின் சென்ட்காம் கமாண்டர் மைக்கேல் குரிலா, அந்நாட்டின் சென்ட்டின் ராணுவத்துக்கான குழு முன்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச அணுசக்தி முகமை வரையறுத்தபடி, ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியத்தை அடையும் முயற்சியில் ஈரான் நெருங்கிவிட்டது . ஈரான் தற்போது 400 கிலோ யுரேனியம் வைத்துள்ளது. இதில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்டவை. இது ஆயுதம் தயாரிப்பதற்கான அளவில் 90 சதவீதத்தை எட்டிவிட்டது என்பதற்கு அர்த்தம். தற்போதுள்ள அளவுகளின்படி, முதல் அணுகுண்டை ஒரு வாரத்திலும் 10 அணுகுண்டுகளை மூன்று வாரத்திலும் தயாரிக்க முடியும் எனத் தெரிவித்து இருந்தார்.