உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவைத்: குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ஈரானில் உள்ள கெய்ஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்கா கூறியது.இந் நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.இந்த தாககுதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது என குவைத் அறிவித்துள்ளது.சேதம் அடைந்த பகுதிகளை விமான நிலையத்தின் தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தின் 4வது முனையத்தில் இருந்து மட்டும் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஈரானின் இந்த தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

தூதரகம் அறிவிப்பு

குவைத் விமான நிலையம் மீதான தாக்குதலில் பலியானவர் இந்தியர் என்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள தூதரகம், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றும் கூறி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
ஜூன் 03, 2026 19:41

இந்த போர் உலக அளவில் அனைவரையும் பாதித்துள்ளது. எரிபொருள் காஸ் தட்டுப்பாடு. எரிபொருள் காஸ் விலை உயர்வு. பெட்ரோல், டீசல் விலை உயர்வு. வீடு கட்டுமான பொருட்கள் விலை உயர்வு. தங்கம், வெள்ளி விலை உயர்வு. விமான பயண கட்டணம் உயர்வு. உரம் விலை உயர்வு. ஸ்டீல், அலுமினியம், காப்பர் விலை உயர்வு. விமான போக்குவரத்து ஸ்தம்பிப்பு. சுற்றுலா தொழில் பாதிப்பு. கார்பொரேட் நிறுவன ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு ஒத்தி வைப்பு என அடுக்கி கொண்டே போகலாம்.


விருமாண்டி
ஜூன் 03, 2026 21:03

இதன் தாக்கம் அதிகமாக உள்ளத. அதை எப்படி குறைக்க முடியும் என்று உலக நாடுகள் அனைத்தையும் சுற்றி வந்து கண்டுபிடிக்க ரெடி.