உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: '' இஸ்ரேல் அத்துமீறலுக்கு ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என ஈரான் தெரிவித்து உள்ளது.கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில், மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் தணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனக்கூறப்பட்டது.இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்ரேலின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 3 நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பொது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகள் மற்றும் அரசு கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இந்த கொடூர ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை ஈரான் தற்காத்து கொள்கிறது. இதனைத்தவிர ஈரானுக்கு வேறு வாய்ப்புஏதும் இல்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவு கட்டினால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் நிலைமை ஸ்திரத்தன்மை பெறும். இவ்வாறு ஈரான் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஜூன் 18, 2025 07:33

ஈரானில் இருக்கும் அத்தனை பேரும் போய் சேர வேண்டிய ஆட்கள் தான் ....அந்தளவுக்கு நல்லவர்கள் அவர்கள்.


Karthik
ஜூன் 17, 2025 22:44

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான். சரி.. ஈரானின் செயலுக்கும், தாக்குதலுக்கும் யார் பொறுப்பு..??


புதிய வீடியோ