உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஈரான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒருவருக்கு துாக்கு

 ஈரான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒருவருக்கு துாக்கு

டெஹ்ரான்: இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ஈரானில் துாக்கிலிடப்பட்டார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்தது. அப்போது, இஸ்ரேல் மீது, மற்றொரு மேற்காசிய நாடான ஈரானும் தாக்குதல் நடத்தியது. கடந்த ஜூன் மாதம், ஈரான் மீது இஸ்ரேல் 12 நாட்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களில், 1,100 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின், உளவு பார்த்த குற்றத்துக்காக ஈரானில், 11 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மற்றொருவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Haja Kuthubdeen
டிச 21, 2025 09:59

ஹும்ம்ம்ம்ம்ம்...இதெல்லாம் நம்நாட்டில் நினைத்தே பார்க்க முடியாது.. தீவிரவாதிகள்(அனைத்து மதத்தையும்)ஊழல்வாதிகள்..கொலை கொள்ளை பஞ்சமா பாதகர்கள் எல்லாம் பயமில்லாமல் திரிய சட்ட நடைமுறைகளும் தண்டனைகளும் கடுமையாக இல்லை...வழக்கு விசாரணை முடிந்து தண்டனை உறுதி செய்வதற்குள் அவன் தானாகவே செத்துடுவான்.அதுவரை ஜாமினில் சுதந்திரமா சகல வசதியோடு மேலும் மேலும் குற்றம் செய்து கொண்டே இருப்பான்.


சமீபத்திய செய்தி