வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது ஒரு முடிவுக்கு வராதா
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் ஏவுகணை வீசியும் ஒரு பயனும் இல்லை..
டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுவியுள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை நோக்கி ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) 10 ஏவுகணைகளை வீசியது. ஈரான் வீசிய ஏவுகணைகளை கத்தார் வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்தது. ஈரான் தாக்குதலை அடுத்து அமெரிக்க போர் விமானங்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்நிலையில் பஹ்ரைன், லெபனான், ஈராக், கத்தார் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன. ஈராக் ,கத்தார் ராணுவ தளங்கள் மீது மீது எந்த சேதமும் இல்லை என அமெரிக்கா உறுதிசெய்துள்ளது. கத்தார் மீதான ஈரான் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கடுமையாக கண்டனம் செய்துள்ளன. கத்தாரின் இறையாண்மைக்கு தங்கள் ஆதரவை வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.
இது ஒரு முடிவுக்கு வராதா
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் ஏவுகணை வீசியும் ஒரு பயனும் இல்லை..