உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்பைக் கொலை செய்வதற்கான ஈரான் சதித்திட்டம்; திடுக் தகவல்

டிரம்பைக் கொலை செய்வதற்கான ஈரான் சதித்திட்டம்; திடுக் தகவல்

நமது நிருபர்

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கொலை செய்வதற்காக ஈரான் சதித்திட்டம் தீட்டி வருவதாக புதிய உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, தான் ஈரானின் 'நம்பர் 1 இலக்கு' என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்கத் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்க டிரம்ப்பைத் தீர்த்துக்கட்ட ஈரான் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் புதிய சதி திட்டம் ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் டிரம்ப் பங்கேற்றபோது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.சமீபத்தில் மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது, அமெரிக்காவுக்கு மரணம் என்றும், நாங்கள் டிரம்ப்பைக் கொல்வோம் என்ற பேனர்களுடனும் ஈரான் மக்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே, ''ஈரானின் கொலைப் பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். இன்று காலை உளவுத்துறை தகவல்களைப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரோடு இருக்கிறேன், ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை' என டிரம்ப் நிருபர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ரவீந்திரன்
ஜூலை 10, 2026 15:57

இதில் எங்கே சதித்திட்டம். ஈரான் டிரம்பை போட்டு தள்ளுவது நல்லது தான். உலக மக்கள் அமைதியாக இருப்பார்கள்


Ramesh Sargam
ஜூலை 10, 2026 13:04

மற்றநாட்டு விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்கவேண்டாம் என்று சொன்னால் கேட்டாத்தானே... இப்பொழுது தினம் தினம் பயந்து வாழவேண்டியிருக்கிறது.


R.Ahilan
ஜூலை 10, 2026 15:08

நீங்கள் உப்பு சாப்பிட்டால், கண்டிப்பாகத் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.


முக்கிய வீடியோ