உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிநவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த ஈரான் ஆயத்தமாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக உலக நாடுகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4arzhe6t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக ஈரானுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 'அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்,' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஈரான் மீது 2வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்தார். ஆனால், இதனை பற்றி அலட்டிக் கொள்ளாத ஈரான், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தங்களிடம் உள்ள அதிநவீன ஆயுதங்கள் குறித்த வீடியோவை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். நிலத்தடி ஏவுகணை தளங்களில் ஹெய்பர் ஷேகன், ஹஜ் குவாசெம், செஜ்ஜில், இமாத் உள்ளிட்ட தொலைதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
மார் 31, 2025 19:28

நாலு வாங்குனாதான் வழிக்கு வருவான் பாரேன்..


M Ramachandran
மார் 31, 2025 17:15

திருடன் என்றைக்கு தன் குற்றத்தை ஒத்து கொள்வான். பாகிஸ்தானுக்கு அணுகுண்டு சப்laiyyarkal sappliaarkal இவர்கள்


Sivagiri
மார் 31, 2025 11:59

ஈராக் நிலைமை போல அதோகதிதான்


rama adhavan
மார் 31, 2025 10:33

அமெரிக்காவுடன் மல்லுக் கட்டினால் ஈரான் இருக்காது.


GMM
மார் 31, 2025 09:10

அமெரிக்கா தன் குடிமக்கள் மற்றும் உலகிற்கு பதில் அளிக்க கடமை பட்ட ஜனநாயக நாடு. ஈரான் அப்படியல்ல. இரான் அணு அயுதம் போன்ற அழிவு சக்திகளை பயன் படுத்தும் என்று அஞ்ச முடியாது. ராணுவ வீரர்களிடம் தான் அயுதம் இருக்க வேண்டும். கலக காரர்கள் இருக்க கூடாது. அடங்க மறுத்தால், ஆயுத பிரயோகம் அமெரிக்கா கட்டாயம் பயன் படுத்த வேண்டும். இனி உலக அமைதி தான் இலக்கு.


Sampath Kumar
மார் 31, 2025 08:38

டிரம்புக்கு கட்டம் சரி இல்லை வாய்க்கு வந்ததை பேசுகிறார் அமெரிக்கா தான் உலகின் தாதா என்ற நினைப்பில் அது அந்தக்காலம் இப்போ குட்டி நாடுகளும் அணு ஆய்தம் வைத்து உள்ளது போர் என்று வந்து விட்டால் அத பயன் படுத்த தவற மாட்டார்கள்


Kumar Kumzi
மார் 31, 2025 12:28

தாதா மாதிரினு சொல்ல வார அப்படி தானே


Kasimani Baskaran
மார் 31, 2025 08:10

ஈரான் அடிவாங்குவது என்று முடிவு செய்து விட்டது போல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை