உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார்; ஈரான் நிபந்தனை

அமெரிக்காவுடன் சமரசத்திற்கு தயார்; ஈரான் நிபந்தனை

டெஹ்ரான்: டிரம்பின் மிகவும் அதிர்ச்சிகரமான எச்சரிக்கைக்குப் பிறகு, ''சமரசம் செய்யத் தயாராக உள்ளோம்'' என நிபந்தனைகளுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி தெரிவித்து உள்ளார்.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. ஈரானை எப்படியாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க வேண்டும் என அமெரிக்கா பல்வேறு எச்சரிக்கைகளையும், அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது. மேற்காசியாவில் போரை தவிர்க்க இரு நாடுகளும் பேச்சு நடத்தவேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து அணுசக்தி தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்; ஆனால் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சு மூலம் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மிக மோசமான நாளாக அமையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சமரசம் செய்ய ஈரான் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது.இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவஞ்சி கூறியதாவது: அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்க சமரசம் செய்ய ஈரான் தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்குவது பற்றி பேச தயாராக இருந்தால் மட்டுமே சாத்தியம். அமெரிக்காவின் நீதிமன்றத்தில் அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் உண்மையாக இருந்தால், நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஈரானிடம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
பிப் 15, 2026 21:30

ஒன்பது போர்களை நிறுத்திய நவரச நாயகன் என்ற பெயரை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சூட்டலாமே


ஆகுயர்தான்
பிப் 15, 2026 18:38

ஒன்பதாவது போறை நிறுத்தியாச்சு. ஒரு நோபல் பரிசு பார்சல்


சிவக்குமார் மதுரை
பிப் 15, 2026 16:26

அமெரிக்காவை நம்பி சமரசத்திற்கு செல்வது நல்லதல்ல


Thravisham
பிப் 16, 2026 04:28

அப்ப சமரசமே இல்லாம இரான் சொந்த மக்களை கொன்று குவிக்கலாமா? கேடு கெட்ட கமேனியால் அரபு பிராந்தியமே நாசமாகிக் கொண்டிருப்பது தெரியாதா ?


பேசும் தமிழன்
பிப் 16, 2026 07:57

அரபு நாடுகள் மட்டுமல்ல.... உலகத்தில் தீவிரவாதிகளின் உற்பத்தியாளர்கள்.... பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை