உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் அணுசக்தி ரகசியங்களை திருடிய ஈரான்

இஸ்ரேல் அணுசக்தி ரகசியங்களை திருடிய ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த ரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முக்கிய திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரானில் அணு ஆற்றலுக்கு தேவையான யுரேனியம் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் இதை அழிவு சக்திக்காக பயன்படுத்த ஈரான் முயற்சித்து வருகிறது.யுரேனியத்தை அணு ஆயுதமாக பயன்படுத்த அதை செறிவூட்டும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த முயற்சியில் ஈரானுக்கு வெற்றி கிடைக்கவில்லை.இந்நிலையில் இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்பு தொடர்பான ரகசிய தகவல்களை ஈரான் உளவுத்துறை கைபற்றியுள்ளதாக, அந்நாட்டு அரசு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அதில் கூறியுள்ளதாவது:இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்பு மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் திட்டங்கள் குறித்த ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள், வீடியோ, புகைப்பட கோப்புகள், கணினி ஹார்டுவேர் தரவு சாதனங்கள் ஆகியவற்றை சேகரித்து ஈரான் உளவுத்துறை கைப்பற்றியுள்ளது.இந்த சம்பவத்துக்கு பின், இஸ்ரேல் இரு இளைஞர்களை ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போரின்போது, பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்தது. இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
ஜூன் 09, 2025 10:30

திருடறது, காப்பி அடிக்கறதுல சீனாக்காரன மிஞ்சிக்க இன்னும் ஒருத்தன் பிறக்கல ?


VENKATASUBRAMANIAN
ஜூன் 09, 2025 07:56

உலகிலேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் மக்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.


அப்பாவி
ஜூன் 09, 2025 07:13

திருட்டு இல்லாம எந்த நாடும் முன்னேற முடியாது. மேற்கு நாடுகள் மட்டுமே கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி ஆய்வு செய்கின்றன. மத்தநாடுகள் அதைக் காப்பியடிக்கின்றன அல்லது திருடுகின்றன.


Mecca Shivan
ஜூன் 09, 2025 06:26

இஸ்லாமும் அணுகுண்டும் கூட்டணியா ..உலகின் அழிவிற்கு நேரம் வந்துவிட்டது


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 05:46

தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாகிஸ்தான் அணுவாயுதங்களை குவித்து வைத்து இருக்கிறது ஈராக்கிடம் அணுவாயுதம் இருந்தது என்று சொல்லப்பட்டது போல சொல்லப்பட்டது - ஆனாலும் பக்கத்தில் இருக்கும் ஈரானால் யுரேனியம் செரியூட்ட முடியவில்லை. ஈரான் பாகிஸ்தானை ஆக்கிரமித்தால் அணுவாயுதங்கள் அவர்களிடம் சென்றால் உலகுக்கே ஆபத்து. அதனால்தான் ஹிரான ஹில் அமெரிக்காவால் பாதுகாக்கப்பட்டது. இதை அறிந்த இந்தியா ஹிரான ஹில்லுக்கே ஹைப்பர் சானிக் ஏவுகணை விட்டு தாக்கியது. இன்று கிட்டத்தட்ட அது ஒரு குட்டி செர்னோபில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை