உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரின் போது துணை நின்ற இந்தியா; நன்றி சொன்ன ஈரான்

போரின் போது துணை நின்ற இந்தியா; நன்றி சொன்ன ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது துணை நின்ற இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் போர் நிலவி வந்தது. குறிப்பாக, ஈரானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம் என்று கூறி, இஸ்ரேலும், அமெரிக்காவும் மாறி மாறி, அணுஆயுத நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனால் போர் இன்னும் மோசமடையும் என்ற அச்சம் ஏற்பட்டது.இதனிடையே, ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் குறித்த தன் கவலைகளை பிரதமர் மோடி ஈரான் அதிபரிடம் தெரிவித்தார். மத்திய கிழக்கில் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க, ராஜதந்திர அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. அடுத்த வாரம் ஈரானுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது, ஆதரவு கொடுத்த இந்தியாவுக்கு ஈரான் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரான் மக்கள் வெற்றி பெற்ற இந்த நேரத்தில், டில்லியில் உள்ள ஈரான் தூதரகம், இந்திய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. கடந்த நாட்களில் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நின்றதற்கு நன்றி,' எனக் குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Tetra
ஜூன் 26, 2025 15:07

ஏம்பா ஈரான் செவனேன்னு‌ போயிட்டிருக்கற என்னையை அடி வாங்காம போக விடமாட்டியா


venugopal s
ஜூன் 26, 2025 10:20

இதற்குப் பெயர் தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதா?


Jack
ஜூன் 26, 2025 06:40

மார்க்கதரிசிகளின் கண்ணோட்டம் எப்படியிருக்கும் ?


Kasimani Baskaran
ஜூன் 26, 2025 04:03

இந்தியா உருவாக்கி பராமரித்து வரும் துறைமுகம் சேதமாகாமல் இந்தியா பார்த்துக்கொண்டது சிறப்பான ஒரு அணுகுமுறை. பல கேடிகளுக்கு புரியவில்லை. புரிந்திருந்தாலும் கூட அதாணியை இழுத்திருப்பார்கள்.


Jack
ஜூன் 26, 2025 06:41

காமெடி பண்ணலியே


Easwar Kamal
ஜூன் 25, 2025 23:41

மோடி அமைதியாக மௌனமாக இருந்தார். ஏதாவது வாய் திறந்தா நம்ம காமெடி பீஸ் மீண்டும் வம்புக்கு ILLUPARU . எதுக்கு பொல்லாப்பு


Ravi Manickam
ஜூன் 25, 2025 22:13

மோடிக்கு எதிராக கோசம் போட்ட மௌவுன்ட் ரோடு பாய்ஸ் எல்லாம் எங்கப்பா, இரானுக்கு எதிரான தாக்குதலுக்கு படைத்தளம் அமைத்து கொடுத்த வளைகுடா நாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க வக்கில்லாத பச்சை பாய்ஸ் இந்தியாவை எதிர்த்து கோசம் போட மட்டும் கூடிடுவாங்க.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 22:04

உம்முடைய முப்பாட்டன் முகலாயர்கள் செய்த அட்டூழியங்களை எந்நாளும் மறக்கவே மாட்டோம். உம்மை சுற்றியுள்ள எந்த நாடும் உம்மை நண்பராக பார்க்கவில்லை.


Jack
ஜூன் 26, 2025 06:43

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சரித்திரமா ?


Barakat Ali
ஜூன் 25, 2025 21:04

இஸ்ரேலுடன் கோர்த்து உடுறாரோ ????


Ramesh Sargam
ஜூன் 25, 2025 21:02

அடுத்த நோபல் அமைதி பரிசுக்கு இரு நாட்டு தலைவர்கள் மிகவும் முயல்கிறார்கள். யாருக்கு அந்த நோபல் அமைதி பரிசு? அல்லது இருவரும் பங்கு போடவேண்டி இருக்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை