உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ரூ.4.50 லட்சம் கோடி செலவு

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ரூ.4.50 லட்சம் கோடி செலவு

வாஷிங்டன்: ஈரான் உடனான போரால் அமெரிக்காவுக்கு இதுவரை, 4.50 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, ‘பென்டகன்’ மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் வரவு – செலவு திட்ட அதிகாரி ஆர்தர் மில்லர், அந்நாட்டு பார்லிமென்டின் செனட் ராணுவ சேவைகள் குழுவிடம், கடந்த 19ல், ஒட்டுமொத்த செலவு மதிப்பீட்டை வழங்கினார். கடந்த 13ம் தேதி வரையிலான நிலவரப்படி, ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு இதுவரை, 4.50 லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில், ராணுவ நடவடிக்கைகளின் செலவு மற்றும் உபகரணங்கள், வெடி மருந்து மாற்றத்துக்கான செலவுகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில், செனட் குழு உறுப்பினர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ராணுவ தளங்களின் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டையும் வழங்கும்படி ஆர்தர் மில்லரை வலியுறுத்தினர். ‘‘அது குறித்த தகவல் இல்லை,’’ என, அவர் தெரிவித்தார். இது குறித்த தகவலை விரைவில் வழங்கும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !