உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு துாக்கு

 ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு துாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து: மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.: இப்போராட்டங்களை ஒடுக்க, ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து நடத்தப்பட்டு வந்த விசாரணையில், பிதா ஹெம்மாட்டி என்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிதா ஹெம்மாட்டியுடன், அவரது கணவர் முகமது ரேசா மஜித் அஸ்ல் மற்றும் அவர்களுடன் வசித்த பெரூஸ், கூரோஷ் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டதாக, இதுவரை, 9 பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, முதல் முறையாக பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !