உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஈரான் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான் : மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த தாக்குதல், 12 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது.ஈரானின் அணுசக்தி மையம், ராணுவ தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. இதில், ஈரானிய ராணுவத்தின் 30 முக்கிய தளபதிகள் மற்றும் 11 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலில், ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டார். பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் தலைவரான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே, அணு விஞ்ஞானிகளான பெரிடவுன் அப்பாஸி, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆகியோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.ஈரானிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள், நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 60 பேருக்கு, நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி தெருவில், உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்று இரங்கல் தெரிவித்ததுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.பொதுவாக இது போன்ற சடங்குகள், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி முன்னிலையில் நடைபெறும். ஆனால், நேற்றைய நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nalla Paiyan
ஜூன் 29, 2025 14:53

،இஸ்ரேல் 30 ஈரானிய இராணுவத் தளபதிகளையும், 11 அணு விஞ்ஞானிகளையும், 17 ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளையும் கொன்றது. ஆனாலும் ஈரான் 30 இஸ்ரேலிய குடியிருப்புகளை இடித்து போரில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறது.


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 29, 2025 10:35

அலி கமெனி எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது, உயிர் பயம் பேசு மட்டும் வீரவசணம். ஈரானில் மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்தால் தான் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் கூடிய விரைவில் சோமாலியா போல ஆகிவிடும் பாரசீக தேசமான ஈரான்.


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 08:12

காமேனியை காணவில்லை - அவரையும் அனுப்பிவிட்டார்கள் என்ற வதந்தி கூட உண்டு. அமெரிக்காவை எதிர்த்து இருந்தாலாவது அரசியல் செய்து தப்பித்து இருக்கலாம். ஆனால் இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி வம்பில் மாட்டிக்கொண்டது ஈரான் என்றுதான் சொல்லவேண்டும். அக்டோபர் 2023ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஆரம்பித்தது - இன்று ஈரானில் விடிந்திருக்கிறது. இதோடு முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.


VENKATASUBRAMANIAN
ஜூன் 29, 2025 08:08

இத்தனை உயிர்களை பலி கொடுத்து என்ன சாதிக்க போகிறார்கள்.


சமீபத்திய செய்தி