உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானை தாக்கிய குற்றத்திற்காக கடுமையான தண்டனையை இஸ்ரேல் எதிர்பார்க்க வேண்டும் என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா கமெனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீதும், ஷிராஜ் மற்றும் தப்ரிஜ் நகரங்கள் மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படை தலைவரான ஜெனரல் முகமது பகேரி ஆகியோர் உயிரிழந்தவர்களில் முக்கியமானவர்கள். இதனை ஈரானிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை திட்ட தலைவராக செயல்பட்ட அலி ஹஜிஜதேஹாவை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் 100 டுரோன்களை ஏவி பதிலடிகொடுத்துள்ளது.இந்நிலையில், ஈரானின் உயரிய தலைவரான அயதுல்லா கமெனி கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரிய குற்றம் செய்துள்ளது. இதற்காக அந்நாடு கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், தாக்குதலுக்கு பயந்து அமைதியாக இருக்க மாட்டோம். தனது முட்டாள்தனமான செயலுக்கு வருத்தப்படும் வகையில் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
ஜூன் 15, 2025 12:28

செம்ம ஜோக்..


Lokesh Babu
ஜூன் 14, 2025 09:25

ரொம்ப நாலா வாய்ல வடை சுட்டுடூயிருக்கான்


Nandakumar Naidu.
ஜூன் 13, 2025 22:39

கிழிச்சீங்க போங்க


தாமரை மலர்கிறது
ஜூன் 13, 2025 21:08

அணுகுண்டு வேணும்ன்னு கதறுகிற ஈரான் மீது ஒரு அணுகுண்டை போட்டு அவர்களின் ஆசையை இஸ்ரேல் நிறைவேற்ற வாழ்த்துக்கள்.


theruvasagan
ஜூன் 13, 2025 20:25

இஸ்ரேலை சீண்டிய ஹமாசுக்கு ஆயிரம் மடங்கு அடியை இஸ்ரேல் திருப்பிக் கொடுத்ததைப் போல உங்களுக்கும் காத்திருக்கு மூர்க்ஸ்.


மீனவ நண்பன்
ஜூன் 13, 2025 20:11

மசூதியில் சிவப்பு கொடி ஏற்றி தேசபக்தி பாடல் தான் பாட முடிந்தது …


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை