உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

மாஸ்கோ :உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தன் ராணுவத் தளபதிகளுடன் மிகவும் ரகசியமான கூட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி, பிரிட்டன், 'ஸ்டார்ம் ஷேடோ' என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கிஉள்ளது. உள்நாட்டில் எதிரிப் படைகளுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.ரஷ்யாவுக்குள் செலுத்தி தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பின்போது, இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஒருவேளை உக்ரைன் இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, ராணுவத் தளபதிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதத்தை பயன்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.தற்போதைய நிலையில், உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. இதில், ரஷ்யாவிடம் மட்டும், 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NAGARAJAN
செப் 26, 2024 09:20

இந்த போருக்கு மூலகாரணம் வழக்கம்போல அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் தான். . அவர்களின் ஆயுத விற்பனைக்கு உக்ரைன் பலிகடா. . வழக்கம்போல. . என்ன ஒரு அயோக்கியதனம்


Barakat Ali
செப் 26, 2024 08:48

என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே .... செலென்ஸ்கி அமெரிக்காவிடம் ....


KRISHNAN R
செப் 26, 2024 06:54

எல்லாம்.......ல் ஆஸ்பத்திரியில். சேர்க்கணும் போல


Kasimani Baskaran
செப் 26, 2024 05:36

இந்தியாவின் சமாதான முயற்சி வெற்றி பெற்றால் உலகுக்கு நல்லது. இல்லை என்றால் மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து. ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட சிறிய அளவிலான குண்டுகள் கூட பெரும் சேதத்தை விளைவித்தன - ஆனால் இப்பொழுது இருப்பவையோ அதை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவை. ஆண்டவன்தான் உலகை காப்பாற்ற வேண்டும்.


தாமரை மலர்கிறது
செப் 26, 2024 01:42

உக்ரைன் அணு ஆயுத போரை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா அதற்கு உதவி செய்யும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை