உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் தாக்குதல்; நேரலையில் தப்பி ஓடிய செய்தி வாசிப்பாளர்

ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் தாக்குதல்; நேரலையில் தப்பி ஓடிய செய்தி வாசிப்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்:ஈரான் டிவி ஸ்டேஷன் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது, நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர், தப்பி ஓடினார். ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o8qhvwxo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று அந்நாட்டு அரசு டிவி ஸ்டேஷன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.தாக்குதல் நடந்த போது டிவி ஸ்டேஷனில் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். ஏவுகணை தாக்குதலில் டிவி ஸ்டேஷன் கடுமையாக சேதமுற்றது. ஸ்டுடியோவில் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர், கட்டடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார்.இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.தாக்குதல் நடந்த போதும் ஈரான் டிவிகளில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2025 01:36

ஈரானுக்கு அணுகுண்டு கிடைத்தால், ஹௌதி, ஹெஸ்புல்லா, ஹமாஸ், தலிபான் என்று அனைவருக்கும் கிடைக்கும். அதனால் அணுகுண்டு வேண்டாம் என்று எவ்வளோ ஈரானை அமெரிக்கா கெஞ்சி பார்த்தது. சீனா இருக்கும் தைரியத்தில் கொமைனி உச்சாணிக்கொம்பில் ஏறிநின்றுகொண்டு ஆட்டம் போட்டார். வேலையை இஸ்ரேலிடம் அமெரிக்கா கொடுத்தது. மோடியின் நண்பர் நெதன்யாஹு கொடுத்த அடியில், கொமைனி ட்ரம்பிடம் அணுகுண்டு எனக்கு வேண்டாம் என்று அழ ஆரம்பித்துவிட்டார். விரைவில் போர் முடிவுக்கு வரும்.


Kulandai kannan
ஜூன் 16, 2025 23:23

தமிழக சேனல்கள் ஈரானில் கிளை திறந்தால் சம்பவம்தான்.


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 21:40

அல்லும் பகலும் இஸ்ரேலுக்கும், இந்தியாவிற்கும் எதிராக பொய் செய்தியை பரப்பும் அல்ஜசீரா என்கிற டிவிக்கும் ஒரு குண்டை போட்டு முழுவதுமாக அழித்தால் நன்றாக இருக்கும்.