உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!

இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார்; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடிக் காரணம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், அந்த நாடு இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. தங்கள் நாட்டை பரம எதிரியாக கருதும் ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=doq07ubr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஈரானிடம் இருக்கும் யுரேனியம், எத்தனை நாட்களில் அந்த நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரான் இடம் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டரை நாட்களில் ஒரு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும். 11 நாட்களில் ஐந்து அணுகுண்டுகளை தயாரித்து விடலாம். ஒரு மாத கால அவகாசத்தில் 11 அணுகுண்டுகளை ஈரான் தயார் செய்து விட முடியும். மூன்று மாத காலத்தில் 19 அணுகுண்டுகளையும், ஐந்து மாத காலத்தில் 22 அணுகுண்டுகளையும் அந்த நாடு தயார் செய்து விட முடியும். அந்த அளவுக்கு அந்த நாட்டிடம் தொழில் நுட்பமும், மேம்படுத்தப்பட்ட யுரேனியமும் இருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி உறுதியான தகவல்கள் கிடைத்த நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலை துவங்கி உள்ளது. எனினும், ஈரான் ஒருமுறை கூட தான் அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கத்துடன் யுரேனியம் மேம்படுத்துவதாக தெரிவிக்கவில்லை. அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Arul Fernando
ஜூன் 19, 2025 04:33

உலகத்தின் நலனை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் சமாதானம் செய்து கொள்ளவேண்டும்


Chandru Chandru
ஜூன் 22, 2025 17:04

Yes


பிரேம்ஜி
ஜூன் 18, 2025 07:30

ஈரானில் யுரேனியம் இருக்கலாம்! அணுகுண்டு தயாரிக்க அறிவுள்ள மனிதர்கள் இருக்க வாய்ப்பில்லை! எனவே யாரும் பயப்படத் தேவையில்லை!


போராளி
ஜூன் 18, 2025 20:28

வேணும்னா நீங்க போய் செஞ்சி கொடுங்களேன்...


visu
ஜூன் 17, 2025 19:31

அவங்க வச்சிருக்காங்க ஆனால் முதலில் தாக்க மாட்டாங்க அனால் இந்தியா பாகிஸ்தான் போரில் கூட பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியது .இதுதான் மூடர்கள் கையில் ஆயுதம் சிக்கினால் அபாயம் என்று சொல்லுகிறார்கள். இந்தியா கடைசிவரை அணு ஆயுதம் பற்றி பேசவே இல்லை


P. SRINIVASAN
ஜூன் 17, 2025 15:48

இஸ்ரேல் என்கின்ற அமெரிக்கா தான் இந்த போருக்கு காரணம். டிரம்ப் உள்ளவரை இந்த உலகம் நிம்மதியாக இருக்காது.


Mani . V
ஜூன் 17, 2025 15:44

ஏதோ சில மாதங்களில் தயாராகி விடும் என்று சொன்னால்கூட நம்பலாம். இரண்டரை நாட்களில் தயாராகி விடும் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. நல்லவேளை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் தயாராகி விடும் என்று சொல்லாமல் விட்டார்களே.


Keshavan.J
ஜூன் 17, 2025 15:40

அணு குண்டு மட்டும் அல்ல எந்த ஒரு மிக ஆபத்தான ஆயுதம் எந்த நாட்டிடமும் இருக்க கூடாது.


பெரிய ராசு
ஜூன் 17, 2025 13:40

அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக....எப்படி ?


மூர்க்கன்
ஜூன் 17, 2025 15:00

எதிரியை விட நாம் பலமான ஆயுதம் வைத்து இருந்தால் நாம் அமைதியை நிலை நட்ட முடியும். மத்திய கிழக்கில் அனைத்து நாடுகளுடனும் பிரச்சினை செய்யும் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்ட வலுவான அணு ஆயுத கட்டமைப்பு ஈரானுக்கு அவசியம் தேவை. சும்மா எல்லோரையும் ரொம்ப நாளைக்கு பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. இப்போதும் கூட இரானால் மட்டுமே அந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்.


பெரிய ராசு
ஜூன் 18, 2025 13:44

மூர்க்கன் ..அமதிக்காக யுரேனியத்தை பயன்படுத்துவான் எப்படுறா ...அதான் இஸ்ரேல் அடி வெளுக்குறான்..அடிக்கிற அடில தாடி எல்லாம் பிச்சுட்டு ஓடணும் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 17, 2025 13:13

யாருமே அணுகுண்டுகளை வைத்துக்கொள்ளக்கூடாது ....


Nagarajan D
ஜூன் 17, 2025 12:42

ஈரான் மட்டுமல்ல எல்லா இஸ்லாமிய தேசங்களும் உலகில் மற்றவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டானுங்க.. பொறிக்கிஸ்தான் எப்படி என்னென்ன சேட்டைகளை செய்யுறானுங்க பங்களாதேஷ் பாரதத்தால் மட்டுமே தனி நாடாக ஆனா ஒரு தேசம் இன்று நம்மை இழிவு படுத்துகிறதென்றால் இஸ்லாம் மதத்தவரெல்லாம் தங்கள் மதத்தை ஏற்காதவர்களை கொல்ல வேண்டும் என்று அவர்கள் மத கோட்படின் அடிப்படையில் ஒன்றிணைந்த கொல்லும் ஒரு மனித இனத்திற்கு எதிரானவனுங்க


மூர்க்கன்
ஜூன் 17, 2025 14:56

பாம்பு விஷத்தை மட்டுமே கக்கும் ??


Bahurudeen Ali Ahamed
ஜூன் 17, 2025 17:59

அப்படியா சொல்கிறீர்கள்,இந்தியாவுக்கு பாகிஸ்தான்தான் எதிரி நாடு, ஈரான், சவூதி, துபாய் , கத்தார் குவைத் ஓமான் இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நட்பு நாடுகள்தான் ஏன் பாலஸ்தீனம் கூட எதிரி நாடு கிடையாது ஏனென்றால் இப்பொழுது வரை இஸ்ரேல்,பாலஸ்தீனம் என்ற 2 ஸ்டேட் பாலிசியை தான் இந்தியா ஆதரிக்கிறது, இனிமேலாவது வன்மம் கக்குவதற்கு முன்பு யோசிக்கவும்.


Murthy
ஜூன் 17, 2025 12:09

இதே போல் ஈராக்கில் நடமாடும் அணுஉலை இருப்பதாக கூறி தாக்கினார்கள் . .....ஏதாவது ஆதாரம் இருந்ததா ??