உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 413 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 413 பேர் பலி!

ஜெருசலேம்: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்,ஹமாஸ் அமைப்பு தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 413 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஹமாஸ் உறுதிபடுத்தி உள்ளது.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 413 பேர் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i8v7lr3f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். சிரியா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: மீண்டும் போர் துவங்கி உள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளேன். பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த விதிமுறைகளை மீறி உள்ளது. கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போராடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

essemm
மார் 19, 2025 02:14

எனக்கொடுமை. இவர்களுடைய வெறியில் சிறுகுழந்தைகளும். அப்பாவி பொதுமக்களும் அல்லவா இறக்கின்றனர். இந்த தீவிரவாத போர் கூடிய விரைவில். முடிவிக்குவரவேண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 18:58

போரை நிறுத்தாமல் இஸ்ரேல் தொடர்ந்து பத்து வருடங்கள் போராடினால் மட்டுமே, ஒட்டுமொத்த பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும். இஸ்ரேலின் புனித போராட்டம் தொடரட்டும். வெற்றி மலரட்டும்.


Kasimani Baskaran
மார் 18, 2025 17:24

தீவிரவாதத்தை முழுவதுமாக அழிக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
மார் 18, 2025 16:59

இஸ்ரேல் மாதிரி இந்தியாவும் மாறினால் தான் இங்கு பாகிஸ்தான் சீன சப்போர்ட் அரசியல்வாதிகள் எண்ணிக்கை குறையும் தவறு கண்டேன் சுட்டேன் இஸ்ரேல் மாதிரி


Bahurudeen Ali Ahamed
மார் 18, 2025 16:50

நெதன்யாகு மோசமானவன் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டான் உடன்படிக்கை ஒப்பந்தங்களை மீறுவது வாக்குதவறுவது என்பது இரத்தத்தில் ஊறியது எதிரி ஹமாஸ் இயக்கத்தினர்தானே தாக்குவதென்றால் அவர்களை தாக்கவேண்டும் அதைவிடுத்து பாலஸ்தீன பொதுமக்களை பெண்கள் குழந்தைகளை கொல்வது என்பது எவ்வளவு மோசமான செயல் இவனுக்கும் முட்டுக்கொடுத்து சிலர் பதிவிடுவது கேவலமாக இருக்கிறது


Raj S
மார் 18, 2025 19:09

இதுவரை பயங்கரவாத தாக்குதலில் எவ்வளவு அப்பாவிகள் இறந்தார்கள்–னு ஒரு கணக்கு சொல்ல முடியுமா... என்னை பொறுத்தவரை இரண்டு பெரும் மிக மோசமானவர்கள்... அமைதி மார்க்கம் இருக்கும் எந்த இடமும் நிம்மதியாக இருக்காது.


Bahurudeen Ali Ahamed
மார் 18, 2025 20:11

ராஜ் சகோ தன் சொந்த நிலத்தில் அகதிகளாகவும் அடிமைகளாகவும் நிர்பந்திக்கப்படும் எந்த சமுதாயமும் எதிர்த்து போராடத்தான் செய்யும், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் அழியவேண்டுமென்று போராடவில்லை தங்களின் சொந்தநிலத்திற்க்காக சுதந்திரபாலஸ்தீனத்திற்காக போராடுகிறார்கள், நாமும்தான் நம்மை அடிமைப்படுத்திவைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து காந்திய வழியிலும் நேதாஜி வழியிலும் போராடினோம் இது தவறா? அப்புறம் இஸ்லாமிய மார்க்கம் இருக்குமிடத்தில் அமைதி இருக்காது என்று கூறியிருக்கிறீர்கள் துபாய், சவூதி, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமான், மலேசியா, புருணை இன்னும் பல இஸ்லாமிய நாடுகளில் நம் இந்திய சகோதரர்கள் எந்த மதவேற்றுமையும் இன்றி அமைதியாக சந்தோஷமாக பொருளீட்டிக்கொண்டிருக்கிறார்கள் இதற்கு என்ன சொல்வீர்கள்


கென்னடி,அமலபுரம்
மார் 18, 2025 21:07

குண்டு வச்சு அப்பாவிகளை கொல்லும் போது குளு குளுன்னு இருந்துச்சா? சும்மா இருந்த இஸ்ரேலை தூண்டி விட்டால் இப்போது மிதி வாங்க வேண்டியதுதான். இதெல்லாம் பத்தாது.தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது.


MUTHU
மார் 18, 2025 21:13

அது சரி பக்கு. ஸிரியாவும் லெபனானும் எதுக்கு சண்டை போடுறான். அதில் எல்லாம் பெண்கள் குழந்தை மரணங்கள் இல்லையா என்ன?


Raj S
மார் 18, 2025 23:11

இப்போ இருக்கும் எல்லோரும் பொருள் ஈட்ட வேறு இடம் பெயர்ந்தவங்க தான்... நீங்க சொன்ன நாடுகள்ல அவனுங்க சொல்றது தான் சட்டம்... அடிமட்டத்துல அங்க வேல செய்யறவங்க எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கறாங்க, அத யாரும் தட்டி கேட்க முடியாது... மத்த இடங்கள்ல ஜனநாயகம் கொஞ்சம் இருக்கு அதனால அமைதி மார்க்கத்தால சண்டை, நீங்க சொன்ன இடங்கள்ல ஜனநாயகம் கிடையாது, அதனால சண்டை இல்ல... ஆக அமைதி மார்கத்துக்கும் ஜனநாயகத்துக்கு ஒத்து வராது...


Vijay D Ratnam
மார் 18, 2025 16:03

பயங்கரவாதிகளை சுத்தமா ஒழிக்க முடியாது. அழிக்கழிக்க அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். அதாவது அனுப்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஒரு பெரிய நெட்வொர்க். மதத்தின் பெயரால் படிப்பறிவில்லாத தற்குறிகளை மூளைச்சலவை செய்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தை வைத்து நடத்தும் மதஅமைப்புகள் மட்டுமல்ல, இது ஒரு பெரிய சர்வதேச பிஸ்னஸ். ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள், ஆயுத சப்ளை, அரசியல்வாதிகள், அதிகாரிகள், புரோக்கர்கள், தொண்டு நிறுவனங்கள், என்.ஆர்.ஓக்கள், வங்கிகள், மீடியாக்கள், ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்து, பயங்கரவாத பயிற்சி பட்டறைகள் என பல பில்லியன் டாலர் பிஸ்னஸ். போர் நடக்கும்போது போரை நிறுத்த அங்கங்கே நடத்தப்படும் போராட்டங்கள், டிவி டிபேட், வாட்சப், டிவிட்டர் புருடாக்கள் எம்பஸி முன் கூடி ஒப்பாரி வைக்கும் அசைன்மென்ட் எல்லாத்துக்கும் நடத்திக்கொடுப்பதற்கு பேமண்ட் உண்டு பாஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்த ஆயுத உற்பத்தியாளர்கள் பொறி பொட்டுக்கடலைதான் விக்கோணும். இவர்களுக்கான சப்ளையின் டிமாண்டை இவர்களே கிரியேட் செய்வார்கள். ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்கு ஒதுக்கும் தொகையை பாருங்கள். நம்ம ஒரு நாடு மட்டும் கடந்த 25 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்துருக்கிறது. அப்படியென்றால் உலகம் முழுக்க எத்தனை பில்லியன் டாலர் பணம் ரொட்டேஷன் ஆகி இருக்கும். சோ இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சர்வதேச அளவில் பெரும் பணப்புழக்கம் நடக்கிறது. இதையெல்லாம் யோசிக்கும் அளவுக்கு அறிவு இந்த கூலிக்கு வந்து செத்தொழியும் பயங்கரவாதிகளுக்கு இருந்ததில்லை, இருக்காது. இஸ்ரேல் போர் மட்டும் நடத்தவில்லை, தாளவாடங்களின் செயல்திறனை டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காட்டுகிறான். ஆர்டர் குவியும்ல. ரஷ்யா- உக்ரெய்ன் போரில் உக்ரெய்ன் பயன்படுத்தும் ஆயுதங்கள் முழுக்க பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவீடன், அமேரிக்காவில் தயாரிக்கப்படுபவை. இப்புடிக்கா அந்தப்பக்கம் ரஷ்யா அவனோட சொந்த தயாரிப்பு ஆயுதங்களை, வட கொரியா, ஈரான் ஆயுதங்களை பயன்படுத்துகிறான். இதுல இஸ்ரேலின் ஆயுதங்களை ரெண்டு பக்கமும் பயன்படுத்துறானுங்க. இதையெல்லாம் டிவில அதுவும் இவனுங்க காட்டுறத பார்த்துவிட்டு ஆஹா, ஐயோ, கடவுளே, அச்சச்சோ என்று புலம்பும் நாம்தான் ஏமாந்தாங்குளிகள். சிம்பிளா கேன.


sankar
மார் 18, 2025 12:42

மதசார்பற்ற? கூட்டணி இறுதிவரை போராடும்


KavikumarRam
மார் 18, 2025 12:21

இந்த ஹமாஸ் எல்லாம் நம்பவே கூடாது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை கொடூரமாக கொன்று அனுப்பினார்கள். இந்த ஹமாஸ் கொடூரர்களுக்கு பாலஸ்தீன் மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. ஆனால் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொன்றது மிகவும் தவறு.


R S BALA
மார் 18, 2025 12:01

மனுஷன் ஒரு நாள் சாகறது உறுதிதான் ஆனாலும் அதுக்காக இந்தளவுக்கு போகவேணாம் இவிங்க ரெண்டுபேரும் உயிரை உயிரா மதிங்கப்பா.


Mecca Shivan
மார் 18, 2025 11:24

ட்ரம்ப் சொல்வதை இஸ்ரேல் கேட்கவில்லையா அல்லது ஹூதீஸுக்கு ஆதரவாக சீன மற்றும் ரஷ்யா அரசுகள் குரல் கொடுப்பதால் இஸ்ரேல் அமெரிக்க சொல்லி இந்த தாக்குதல்களை தொடர்கிறதா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை