உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இருந்து மக்கள் வெளியேறலாம்: 48 மணி நேர பாதையை திறந்தது இஸ்ரேல்

காசாவில் இருந்து மக்கள் வெளியேறலாம்: 48 மணி நேர பாதையை திறந்தது இஸ்ரேல்

காசா: இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது. மேற்கா சிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ல் திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலைத் தொடங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது. இதன்படி, இஸ்ரேல் ராணுவம் காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழி தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. காசா நகரில், 3,000 ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். எனவே ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன. பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்ட ஒரே பாதையான கடலோர அல்-ரஷீத் சாலையை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. அந்த சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால், சலா அல்-தின் சாலை வழியாக பொதுமக்கள் வெளியேறலாம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த பாதை 48 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்கள் தொடரும் நிலையில், பல குடும்பங்கள் வெளியேற முடியாமல் சாலையோரங்களில் சிக்கித் தவிக்கின்றன. இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஐ.நா., மனித உரிமைகள் ஆணையமும், ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
செப் 18, 2025 16:18

இஸ்ரேல் செய்யும் அதே வழியில் இந்தியாவும் செய்ய வேண்டும் இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களின் குடும்பங்கள் உடனே இந்தியாவிலிருந்து வெளியேறவேண்டும்


Rathna
செப் 18, 2025 11:37

நீ முன்னால் கொடுத்ததை இப்போது வாங்கி கொள்கிறாய். நீங்கள் எந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்து இருக்கிறீர்கள்??


மாபாதகன்
செப் 18, 2025 13:18

இப்போ அழிக்க நினைப்பவர்களும் பின்னாளில் அழிந்து போனதுதான் வரலாறு. விஷம் நெஞ்சில் இருந்தால் அது இப்படித்தான் வெளிப்படும்


karupanasamy
செப் 18, 2025 15:54

மாபாதகன் உண் பெயர் மொகம்மது ஆகத்தான் இருக்கும். புடவை கட்டிக்கொள்


Anand
செப் 18, 2025 10:52

கண்டனம் தெரிவித்த கையோடு அவனவன் வேலையை கவனிக்க சென்றுவிடுவான், இவனுகளோட கண்டனத்தை யாரு கேட்டா? இதனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா? அல்லது ஹமாஸ் தீவிரவாதத்தை விட்டுவிட்டு பிணைக்கைதிகளை விட்டுவிடுமா? ஒரு மண்ணும் இல்லை.


நிவேதா
செப் 18, 2025 10:23

காஸாவை குண்டு போட்டு அழித்துவிட்டு, இஸ்ரைல் தன் நாட்டு மேலயே குண்டு போட்டு அழிந்து போகலாம். பிரச்சனையாவது குறையும்.


Thravisham
செப் 18, 2025 11:39

இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவர்களை முடித்து வைக்கும். காசா மக்களின் அத்தனை துன்பங்களுக்கும் காரண கர்த்தாக்கள் ஹமாஸ் ஹிஸ்பொல்லாஹ் தீவிர moorkarg


நடராஜன்,மண்டபம்
செப் 18, 2025 12:06

பக்கத்து வீட்டுக்காரனால் உன் வீட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவனிடம் சண்டையிட்ட பிறகு உன் வீட்டை நீயே பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவாயா? கருத்தை போடும் முன்பு மூளையை உபயோகிக்க முயற்சி செய்..


நிவேதா
செப் 18, 2025 10:20

வெளியேறுபவர்களை சுட மாட்டார்கள் என என்ன நிச்சயம்? சுட்டுவிட்டு அந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளும் இருந்தனர் என கூறவும் வாய்ப்புண்டு


Anand
செப் 18, 2025 10:45

அதுதானே உண்மை..


Indian
செப் 18, 2025 12:26

இங்கேயிருந்து ஊளையிடுவது சரியல்ல


JaiRam
செப் 18, 2025 15:33

அந்த இடத்தில் பயங்கரவாதிகள் இருந்தால் குண்டு போடத்தான் செய்வார்கள் மூர்க்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போர் தொடரட்டும் வாழ்க அஞ்ச நெஞ்சன் மாவீரன் நெதன்யாகு


ஈசன்
செப் 18, 2025 08:46

பிரிட்டன் கண்டித்துள்ளதா! இவன் நாட்டிலேயே பல கலவரங்கள் வரும் காலங்களில் நடக்க போகுது. ஹமாஸ் போன்ற தீவிரவாதிகள் குழு அங்குள்ள இஸ்லாமியர்களுடன் கை கோர்த்து கொண்டு இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் போல் திடீரென்று லண்டன் மீதும் மற்ற நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அப்போது இங்கிலாந்து பூர்வகுடிகள் கை கட்டி வாய் பொத்தி இருப்பார்களா. உங்களுக்கு வரும் போது பார்க்கலாம் அது தக்காளி சட்னியா, ரத்தமா என்று....


cpv s
செப் 18, 2025 11:49

super the UK Will face this kind of attack in future because attack community enter the uk,


முக்கிய வீடியோ