உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக் கொண்டது இஸ்ரேல்

கமேனியை கொல்ல திட்டம்: ஒப்புக் கொண்டது இஸ்ரேல்

டெல் அவிவ்: '' ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார்,'' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் அந்நாட்டு டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது.போரின் போது, தீவிரமாக அவரை தேடினோம். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. தலைமையை மாற்றுவதே நோக்கம். கமேனியை கொல்வதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏதும் தேவையில்லை. இவ்வாறு காட்ஸ் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4xzh8ewp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரான் தயாரிக்கும் அணுஆயுதங்களினால், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குற்றம்சாட்டிய இஸ்ரேல் அந்நாடு மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தப் போர் 12 நாட்கள் நீடித்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டின் பேரில், போர் நிறுத்தம் அமலானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Jay Al
ஜூன் 28, 2025 03:31

ஈஸ்ரெய்ல் போல ஒரு தலைவன் வேனும் ,, மோடி போதாது


R. SUKUMAR CHEZHIAN
ஜூன் 27, 2025 21:15

Congratulations Israel, advance wishes. Jai Hind.


GMM
ஜூன் 27, 2025 18:09

இந்தியாவும், இஸ்ரேலும் போரின் முழு இலக்கை அடைய முடியும். ஆனால், நடுவில் பின் வாங்கி விட்டனர். விளைவு மக்களை பாதிக்கும். தீவிரவாதிகள் முழு இலக்கு எதிரி. நாடுகள். மக்களை காக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. சர்வதேச அமைப்பு சரியில்லை. நட்பு நாடுகள் தான் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். கமெனியை கொன்றாலும் தீவிரவாதம் நிற்காது. தவறான போதனைகள் மாற்றம் செய்ய வேண்டும்.


Murthy
ஜூன் 27, 2025 17:49

50 கிமீ நீளம்...15 கி.மீ அகலம் கொண்ட காசா வில் இருக்கும் ஹமாஸை வெல்ல முடியவில்லை ..... வீண் பெருமை வேறு .....இதில் ஈரானை பிடிக்க போகுதாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை