உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 35 பேர் பலி

ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 35 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சனா: ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர்.மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து, அந்நாட்டின் மீது 2023 முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.குறிப்பாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் டிரோன் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக, ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் படையினர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 130க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து ஹவுதி அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், 'இந்தத் தாக்குதலில் தலைநகர் சனாவில் தான் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ராணுவ தலைமையகம் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Moorthy
செப் 11, 2025 17:53

இந்தியாவில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய நுபுர் சர்மா தங்கள் மத உணர்வை அவமதித்து விட்டார் என்று உலக பணக்கார கத்தார் நாடு கூப்பாடு போட்டது அதனால் பிஜேபி NUPUR சர்மா வை கட்சி பதவியில் இருந்து நீக்கியது ஆனால் இன்று இஸ்ரேல் ,கத்தார் நாட்டில் புகுந்து வான் வழி தாக்குதல் நடத்தி உள்ளது... கத்தார் ஏன் இப்போது வாய் மூடி ,ஊமையாகி விட்டது ??


cpv s
செப் 11, 2025 14:14

attack at back side hole for this evil must be eliminated from soil


JaiRam
செப் 11, 2025 12:44

மூர்கர்களிடம் இரக்கம் வேண்டாம் வெற்றி தொடரட்டும் வாழ்க மாவீரன் நெதன்யாகு


Artist
செப் 11, 2025 11:29

பரிதாபமாக உயிரிழந்தனர்…


P. SRINIVASAN
செப் 11, 2025 10:16

உலகத்தில் அமைதியை கெடுக்க அமெரிக்க இஸ்ரேல் வழியாக செய்கிறது. இந்த லச்சணத்தில் நோபல் பரிசு வேண்டும் அதிபர் ட்ரம்ப்கு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை