உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: தளபதிகள் உட்பட ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 20 பேர் பலி

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: தளபதிகள் உட்பட ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 20 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: ஹமாஸ் தளபதிகள் உட்பட 20 பேர் ஒரே மாதத்தில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்; 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள இந்தப் போரில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பு: இஸ்ரேலில் 2023ல் அக்டோபர் 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றிய ஹமாஸ் தளபதி யுசுப் முகமது ஜூமா உள்ளிட்ட 20 பேர் கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 குடியிருப்பு கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் அழித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி பெரிய கோட்டையான காசா நகரத்தை விரைவில் கைப்பற்றுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Uthirapathi
செப் 16, 2025 08:28

ஒன்றை மறந்து விட்டார். வீட்டுக்குள்ளே இருந்த நபர்களைக் கொன்று, சிலரை பிணைக் கைதிகளாக கொண்டு செல்பவனை, கொன்று அவன் குடும்பத்தையும் ஊரைவிட்டே துறத்துவதில், எந்த மாதிரியான ஞாயம் மீறப்பட்டது என்பதை, சற்று விவரமாக சொல்லுங்கள்.


Mohamed Rahmath
செப் 15, 2025 13:48

உங்கள் சொந்த வீட்டில் வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒருவன் வெளியேற்றினால் வெளியேற்றியவன் தீவிரவாதியா வெளியேறுபவர்கள் தீவிரவாதியா கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டாம???


SUBBU,MADURAI
செப் 15, 2025 14:06

சும்மா இருந்த இஸ்ரேலை சொறிஞ்சி விட்டுட்டு இப்ப வியாக்கியானமா பேசுற இஸ்ரேலை தாக்குவதற்கு முன்பு உள்ள பாலஸ்தீனம் எப்படி சோலையாக இருந்தது இஸ்ரேலை தாக்கியதற்கு பின் பாலஸ்தீனம் எப்படி சுடுகாடாகி விட்டது பார்...


ஆரூர் ரங்
செப் 15, 2025 15:32

அரபு நாடுகள் முழுவதும் நாடோடிகள்தான் உள்ளனர். ஆனால் இஸ்ரேலில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் வசிப்பதும் வாழ்வதும் நாடாண்டதும் பைபிள் குர்ஆனில் கூட இருக்கும் வரலாறு. அதே நேரத்தில் பாலஸ்தீனம் என்று ஒரு தனி நாடு, தனியான அரசர் இருந்ததாக வரலாறே இல்லை. ஹமாஸ் ஐ எஸ், ஹவுதி, அல் காய்தா போராட்டங்களுக்கு பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளே முழு மனதுடன் ஆதரவும் தருவதில்லை.


N.Purushothaman
செப் 15, 2025 08:27

போற போக்கை பார்த்தால் ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்தை நடத்த கூட தலைவர்கள் இருக்க மாட்டார்கள்.. ஹமாஸுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பாலஸ்தீன அரசியல் கட்சியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆயுதங்களை கீழே போட்டு மக்களோட மக்களாக இருக்க வேண்டியது தான் ...அதோடு இஸ்ரேலிய பிணைய கைதிகளை விடுவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் ஹமாஸ் போராடி கொண்டே இருந்தால் இரு நாடு கொள்கை பலவீனமடையும் ....இஸ்ரேல் காஸாவை கையில் எடுத்து கொண்டுவிட்டால் இரு நாடு கொள்கை நிச்சயம் இல்லாமல் போய்விடும்... யூத மக்களுடன் இஸ்லாமிய மக்கள் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் ...அதில் பல நன்மைகள் இருந்தாலும் அதி தீவிர தீமைகளும் உள்ளது .....


Tamilan
செப் 14, 2025 23:32

62000 - ஒரு லச்சம் பேரை கொன்றபிறகும் தீவிரவாதிகள் அங்கு இருக்கிறார்களா?. .


Modisha
செப் 15, 2025 03:38

தீவிரவாதிகளை உருவாக்க இரவு பகல் ஓயாது வேலை செய்கிறார்கள் .


Kasimani Baskaran
செப் 15, 2025 04:06

மாற்று மதத்தினர்களை மண்டையை உடைப்போம் என்பதை அப்படியே பின்பற்றினால் வேறு என்ன நடக்கும்?


சாந்தகுமார்,பரமக்குடி
செப் 15, 2025 05:22

தமிழன் என்கிற பெயரில் நீ இருப்பது அங்கும் நிறைய போலிகள் இருக்கின்றனர் அவர்களையெல்லாம் கூண்டோடு மேலே அனுப்பி விட்டுதான் இஸ்ரேல் ஓயும் உன்னைப் போன்ற மூர்க்கன்கள் இங்கிருந்து கொண்டு மூக்கைச் சிந்துவதை தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை.


பேசும் தமிழன்
செப் 15, 2025 07:46

தமிழன் என்ற போலி பெயரில்... ஒரு தீவிரவாத ஆதரவாளர்


Pandi Muni
செப் 15, 2025 09:26

தமிழ்ல பெயர் வைக்காதவன் தமிழனாம் இந்திய மொழிகளில் பெயர் வைக்காதவன் இந்தியனாம். இவனுங்களையெல்லாம் துரத்தியடிக்காம இன்னமும் விட்டு வச்சிருக்கான் பாரு அவன சொல்லணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை