உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடை யே போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக கூறி, காசா மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று உத்தரவிட்டார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் -- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தத்தை மீறியதால் பிரதமர் நெதன்யாகு, காசா பகுதியில் உடனடி தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்' என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ