உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெரும் தாக்குதல் நிச்சயம்: ஹவுதி பயங்கரவாத அமைப்பை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

பெரும் தாக்குதல் நிச்சயம்: ஹவுதி பயங்கரவாத அமைப்பை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல் அவிவ்: ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு பெரும் தாக்குதல் நிச்சயம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில். சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஹவுதி பயங்கரவாத அமைப்பின் முதல் நேரடி தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x5q08qh3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில்,பெரும் தாக்குதல் நிச்சயம்.தனது அமைச்சரவை இன்று மாலை காசா தாக்குதலின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கும் என்றும், ஹமாஸை தோற்கடிப்பதே எங்களது ராணுவம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.நாங்கள் இரண்டு பணிகளில் கவனம் செலுத்துகிறோம்,'ஒன்று, நமது பணயக்கைதிகளை மீட்டு கொண்டு வருவது. இரண்டு, ஹமாஸை தோற்கடிப்பது,இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAINUTHEEN M.
மே 05, 2025 14:02

ஹமாஸை அழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி காஸா மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கும், அதற்கு துணை போகும் அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டிற்கும் இறைவன் மிகப்பெரிய தண்டனையை விரைவில் கொடுப்பான். தமிழில் ஒரு பழமொழி உண்டு. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இது உலகில் வாழும் இருநூறு கோடி முஸ்லீம் மக்களின் ஏகோபித்த பிரார்த்தனையாக இருக்கிறது. காஸாவிற்கு செல்லும் ஐ.நா.சபையின் மனிதாபிமான உணவுச்சங்கிலியை தடுத்து நிறுத்தி அப்பாவி காஸா மக்களை பட்டினியால் சாவும் நிலைக்கு ஆளாக்கிய பாசிஸ யூதக்கொடூரன் நெதன்யாகு இறைவனின் தண்டனைக்கு ஆளாகி அழிவது உறுதி. மனிதாபிமானம் உள்ள எவரும் இந்தக் கொடூரச்செயலை ஏற்க மாட்டார்கள். மனவேதனையுடன்.


K.Uthirapathi
மே 05, 2025 07:33

மத பேதமின்றி, உலகிலுள்ள அத்தனை தீவிரவாதிகளும், ரௌடிகளும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் என அத்தனை பேரும் அழிக்கப்பட வேண்டும். தீவிரவாதம், உலக வெப்பமய மாதலைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.


Subramanian Suriyanarayanan
மே 05, 2025 00:57

அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு....


Veeraa
மே 04, 2025 23:29

Yeman will issue 45,000 to 50,000 death certificates to their people within 4 or 5 months.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை