உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்

காசா உதவி மையம் அருகே இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு; 30 பேர் பலி; 115 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் காசாவில் அமெரிக்கா நிதியுதவி இயங்கி வரும் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது. “ போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து ஒரு நிலையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல் படுகொலை' என ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பெரிய ராசு
ஜூன் 01, 2025 16:49

ரைட்டு ...தூங்கி எந்திரிச்சி உடனே ஒரு பத்துபேர் போட்டதால் தான் இஸ்ரேலுக்கு தூக்கம் வரும் போல ..அதுசரி மூர்க்கன் பண்ணுன வேலை அப்படி ...


Pandi Muni
ஜூன் 01, 2025 15:17

எப்படியோ தீவிரவாதியோ அவனை சார்ந்த கும்பலோ ஒழிந்தால் சரி.


தமிழன்
ஜூன் 03, 2025 09:39

எந்த அளவு வக்கிரம் உன் மனதில் இருக்குது. நாளை உன் குடும்பத்திற்கும் இதே நிலை வரணும்


Nada Rajan
ஜூன் 01, 2025 14:59

ஆழ்ந்த இரங்கல் உயிரிழந்த ஆன்மா சாந்தி அடையட்டும்


பேசும் தமிழன்
ஜூன் 01, 2025 15:45

அப்படியே இறந்த இஸ்ரேல் மக்களுக்கும் இரங்கல் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.


புதிய வீடியோ