உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரிப்பு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உள்ளது.ஈரானில் 'Operation Rising Lion என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானில் அணுநிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.அதேநேரத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து இஸ்ரேல் அவசரநிலையை அறிவித்தது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது என்பதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 12%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது. போர் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உற்பத்தியை பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oviya Vijay
ஜூன் 13, 2025 16:09

உலக அரங்கில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தும் இந்தியாவில் குறைக்காமல் இது நாள் வரையிலும் பல லட்சம் கோடிகள் அடித்தாகி விட்டது... பின்னர் என்ன??? தற்போது மட்டும் சர்வதேச சந்தையின் விலை உயர்வை காரணம் காட்டி விலை உயர்த்த வாய்ப்பிருக்கிறது என கூறப்படுவது வெட்கக்கேடானது... இது ஒரு கேவலமான முன்னெடுப்பு... உலக அரங்கில் சந்தை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன. மத்திய அரசு அதில் தலையிடுவதில்லை என மத்திய அரசு கூறி மக்கள் தலையில் மிளகாய் அரைத்தது நினைவில் வைத்துள்ளோம்... அப்படி இருக்கையில் உலக அரங்கில் பெட்ரோல் டீசல் விலை பலமுறை குறைந்தும் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஏன் விலையைக் குறைக்கவில்லை... அப்படியெனில் இவ்வளவு நாட்கள் மத்திய அரசு சொல்லி வந்தது பொய்... இந்த கேள்விக்கு மட்டும் பிஜேபி தலைகளிடம் முக்கியமாக மம்மியிடம் பதில் கிடைக்காது... ஆனால் மக்களிடம் இதற்கு பதில் உண்டு... தேர்தல் அன்று...


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 16:42

மத்திய அரசு சமீபத்தில் 3 முறை வரியைக் குறைத்தது. ஆனால் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம். டீசலுக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த விடியல் மாநில வரியை குறைக்கவில்லை. சமையல் எரிவாயுவுக்கு 500 ரூபாய் மானியம் வாக்குறுதியோடு நின்றுவிட்டது.


ஆரூர் ரங்
ஜூன் 14, 2025 11:10

தேர்தல் வாக்குறுதியின்படி ஸ்டாலின் பெட்ரோல் டீசல் வரிகளை குறைத்தாரா? எரிவாயுவுக்கு 500 மானியம் என்னாயிற்று? மத்திய அரசு மூன்றுமுறை பெட்ரோல் வரியைக் குறைத்த போதும் த‌மிழக அரசு குறைக்க வில்லை. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் வரியை இன்னும் அதிகமாக்கியுள்ளனர். மத்திய பெட்ரோல் வரி வருவாயில் பல்லாயிரக்கணக்கான கிமி உலகத்தர சாலைகள் போட்டு பெட்ரோல் டீசல் சேமிப்புக்கு உதவியுள்ளனர். சூரிய ஒளி மின்னுற்பத்தி, மின் வாகனங்களுக்கு சலுகைகள் அளிக்கின்றனர்.


கண்ணன்,மேலூர்
ஜூன் 14, 2025 15:40

அப்பத்துக்கு மதம் மாறிய நீ இந்த நாட்டிற்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும் நீ போடுகிற கருத்துக்கள் பெரும்பாலும் தேசவிரோத பதிவுகள்தான் ஜோசப் விஜய்யின் அடிமையான நீ ஓவியமாக இருப்பதுதான் ஆச்சரியம்


Saai Sundharamurthy AVK
ஜூன் 13, 2025 14:43

அப்படியே விலை ஏறினாலும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் வரை தான் ஏறும். அதிகம் ஏற வாய்ப்பில்லை. நல்லவேளை , மத்திய அரசு குறையும் போது குறைக்க வில்லை. 5 ரூபாய் குறைத்திருந்தால் இப்போது 10 ரூபாய் வரை ஏற்ற வேண்டி வந்திருக்கும். பாஜக அரசு சாதுர்யமாக செயல்படுவது வரவேற்கதக்கது.


Karthik Madeshwaran
ஜூன் 13, 2025 12:15

2022 ஆம் ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் அளவில் இருந்த பொழுது இந்தியாவில் உச்சம் தொட்டது பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல். பிறகு மே 2023 இல் 64 டாலர் ஆக பெருமளவில் விலை குறைந்தது. அப்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்க படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 2025 கூட 55 டாலர் என்ற அளவில் வெகுவாக குறைந்தது. அப்போதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை. ஏற்றிய விலையை ஏற்றிய படியே இந்தியாவில் பெட்ரோல் 100 ரூபாய்க்கும் மேலே தான் உள்ளது, விலை குறைக்கவே இல்லை. யார் பாக்கெட்டுக்கு அந்த மக்கள் பணம் சென்றது என்பதை நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும். இப்போது வெறும் 25 டாலர் விலை மேலே போனவுடன் மீண்டும் விலையை கூட்ட பார்க்கிறார்கள். யார் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் இந்த பாஜக அரசாங்கம் ? இதற்கும் பாஜக சொம்புகள் ஜால்ரா போடுவார்கள். மானகெட்டவர்கள். விலையை ஏற்றினால் அது அய்யோக்கியத்தனம், அப்பட்டமான ஏமாற்று வேலை. மக்களே சிந்தியுங்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 14:01

பெட்ரோல் விலையைக் குறைந்தால் பயன்பாடு கூடுதலாகி, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகமாகி நமது அன்னியச்செலாவணி காலியாகும். அதுதான் உங்கள் ஆசையா? அதற்கு பதில் அரசு உயர்தரமான தங்க நாற்கரம் போன்ற சாலைகள், பாலங்களைக் கட்டி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த உதவுகிறது . சூரிய ஒளி மின்னுற்பத்தி, மின் வாகனங்கள் போன்ற மாற்றுக்களுக்கு மானியமும் அளிக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து பெட்ரோல் விலை பற்றி குரலெழுப்பி கூச்சல் போடுற ஆட்கள் அரபிகளுக்காக உழைக்கும் வர்க்கம்.


ஆரூர் ரங்
ஜூன் 14, 2025 14:06

100 ரூபாயில் 32 ரூபாய் மாநில வரிகள். அதாவது மத்திய வரியை விட மாநில வரி அதிகம். வாரிசு மகன் மருமகன் பற்றி PTRP கூறியது உண்மைதானே?.


GMM
ஜூன் 13, 2025 10:55

பூமியில் இருந்து கிடைக்கும் பொருள் மனித உழைப்பில் உருவானது அல்ல. இயற்கை. இவைகளுக்கு பண பரிவர்த்தனை கூடாது. பண்டமாற்று முறையில் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு ஏழ்மை அகற்ற இந்த நடவடிக்கை உதவும்.


Ganapathy
ஜூன் 13, 2025 12:31

சும்மாவா வெளிய வருது? பூமியிலிருந்து எடுப்பதற்கான செலவு காந்தி கணக்கா? அதாவது மக்களின் வரிப்பணத்திற்க்கு மதிப்பில்லையா?


சங்கி
ஜூன் 13, 2025 19:28

சாதி இடஒதுக்கீடு அடிப்படையில் விலை ஏற்ற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை