உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிராகனும், யானையும் இணைந்திருப்பது அவசியம்: மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்

டிராகனும், யானையும் இணைந்திருப்பது அவசியம்: மோடியிடம் சீன அதிபர் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தியான்ஜின்: வரி விதிப்பு மூலம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், 'சீனா என்னும் டிராகனும், இந்தியா என்னும் யானையும் நண்பர்களாக இணைந்திருப்பது அவசியம்,'' என்று கூறினார்.சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு சீனாவின் வூஹான் நகருக்கு பிரதமர் சென்றிருந்தார். அதன் பிறகு 7 ஆண்டுகளில் தற்போது சென்றுள்ளார்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x4rgt7ji&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப்பின் அழுத்தத்துக்கு இரு நாடுகளும் ஆளாகி உள்ள நிலையில், பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில், பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்தியா மீதான வரி விதிப்புக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.இந்நிலையில், சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில் எல்லை பிரச்னை, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியை வரவேற்று ஷி ஜின்பிங் பேசியதாவது: சீனாவின் முக்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. பிராந்திய மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்காக இரு தரப்பு உறவுகளை இரண்டு நாடுகளும் கவனத்துடன் கையாள வேண்டும்.நம்பிக்கையை வளர்க்க இரு நாடுகளுக்கு இடையே இன்னும் தொடர்பை அதிகரிக்க வேண்டும். பொருளாாதரம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இன்னும் வலிமையான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.நாம் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்கிறோம். இதன் மூலம் மிரட்டலுக்கு பதில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை வழங்க முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாற்றத்தை உலகம் எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச சூழ்நிலை தற்போது குழப்பம் நிறைந்ததாக காணப்படுகிறது. இந்தியாவும் சீனாவும் மிகுந்த பழங்கால நாகரிக நாடுகள். உலகின் மிகப்பெரிய இரண்டு நாடுகளாகவும் இருக்கிறோம். சீனா என்னும் டிராகனும், இந்தியா என்னும் யானையும் நண்பர்களாகவும், சிறந்த நட்பு நாடாகவும் இருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு ஷி ஜின்பிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

k.Ravi Chandran, Pudukkottai
செப் 01, 2025 10:01

சீன அதிபர் ஜீ ஜின் பிங் இந்திய,சீன உறவை அழகாக, ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். பரஸ்பர நம்பிக்கைக்கும் இன்னும் பயணிக்க வேண்டும் என்கிறார். இந்தியா உறவுக் கரம் நீட்டியவுடன் பதிலுக்கு மிக உறுதியான வார்த்தைகளை சொல்லி இருக்கிறார் சீன அதிபர். இரு நாட்டின் உறவும் நாளையே தலை கீழாக மாறிவிடப் போவதில்லை. பரஸ்பரம் நம்பிக்கையான செயல்பாடுகளால் மட்டுமே அதை மாற்ற முடியும். இருநாடுகளுக்குமே அந்த பொறுப்புணர்வு உண்டு.


இளந்திரயன், வேலந்தாவளம்
ஆக 31, 2025 22:44

மாற்றம் ஒன்றே மாறாது


இளந்திரயன், வேலந்தாவளம்
ஆக 31, 2025 22:42

மாற்றம் ஒன்றே மாறாதது.


Tamilan
ஆக 31, 2025 22:16

அம்பானியும் அதானியும் அமெரிக்காவிடம் இழந்ததை வேறு எங்காவது எடுக்கவேண்டும் என்று படாதபாடு படுகிறார் பாரத பிரதமர்


அப்பாவி
ஆக 31, 2025 21:39

நடுவுல ஒரு துருவக்கரடி ரஷியா வை வுட்டுட்டீங்களே. அப்புறம் பிரேசில் அனக்கொண்டா வேற இருக்கு. சவுத் ஆப்ரிக்கா சிங்கம் இருக்கு.


Thravisham
ஆக 31, 2025 20:46

ஆனால் மகாத்மா மோடி பெண் பித்தனை போன்ற அறிவிலி அல்ல ஏமாறுவதற்கு. ஆங்கிலத்தில் சொல்வது போல Hope for the Best, but, be prepared for the worst. Keep your Gun powder dry and Active


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 31, 2025 20:45

பூனையும் எலியும் இப்போ டிராகனும் யாளையும் ஆயிடிச்சே எத்தினி நாளைக்கோ?


பிரேம்ஜி
செப் 01, 2025 07:39

சூப்பர் நையாண்டி கருத்து! எல்லாம் காலம் செய்யும் கோலம்! கேட்டால் ராஜீய உறவு மேம்படுத்த என்பார்கள்! இவ்வளவு நாள் அமெரிக்காவுடன் மேம்படுத்திய உறவு என்னாயிற்று? இந்தியர்கள் எப்போதும் ஏமாளிகள் தான் என்பது திரும்ப திரும்ப நிரூபிக்கப்படுகிறது!


புதிய வீடியோ