உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்: டிரம்ப் அடம்

எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானம்: டிரம்ப் அடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்:''கடந்த எட்டு மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியுள்ள எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விர்ஜீனியாவின் குவான்டிகோ நகரில் ராணுவ அதிகாரிகளுடன் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அதில் அவர் பேசிய தாவது: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தும் முயற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளோம். ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். போர் நிறுத்தத்திற்கு அனைத்து அரபு நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால், எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடித்து வைத்தவனாக இருப்பேன். இதை போல் யாரும் செய்ததில்லை. இதற்காக எனக்கு நோபல் பரிசு கொடுப்பரா என தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 'டிரம்ப் எப்படி போரை நிறுத்தினார்' என்று புத்தகம் எழுதுபவருக்கு அதை தந்து விடுவர். பொதுவாக எழுத்தாளர்களுக்கே நோபல் பரிசு செல்கிறது. எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே அவமானம். காசா போரை நிறுத்தினால் நோபல் பரிசு கிடைக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

adalarasan
அக் 02, 2025 22:22

i have not come across in my last 70years anybody claiming/threatening the mr. TRUMP,,,REG. NOBLE PRICE.strange unbeleivable????


Ezee Link
அக் 02, 2025 00:22

ஐ..... அமெரிக்கா கமலஹாசன் ... ஓசைகேர் கிடைகாதலா ஆஸ்கார் கு நஷ்ட்டம் - கமலாஹாசன் டொனல்டுக்கு நோபல் கிடைகாதலா அமரிக்கா கு நஷ்ட்டம் - என்னடா சோதனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை