அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்திய நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.வர்த்தகம் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட விஷயங்களில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடியுரிமை பெ றாத வெளிநாட்டவர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சம் ஆக டிரம்ப் உயர்த்தினார். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அந்நாடு செல்ல விரும்பும் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்து பேசினார். வர்த்தக விவகாரம் மற்றும் எச்1பி விசா குறித்து இரு வரும் பேசியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இருவரும் இந்தாண்டு ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தக பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.