உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்க இருக்கோம், கவலைப்படாதீங்க... வங்கதேச தலைவருக்கு ஜோ பைடன் உறுதி

நாங்க இருக்கோம், கவலைப்படாதீங்க... வங்கதேச தலைவருக்கு ஜோ பைடன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார்.அமெரிக்கா, நியூயார்க்கில் ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்தபோதுவங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். மாணவர்கள் முந்தைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராகவும், வங்கதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கவும் போராடியது பற்றி பைடனிடம் முகமது விளக்கினார்.

ஆதரவு

அப்போது, 'மாணவர்கள் தங்கள் நாட்டிற்காக இவ்வளவு தியாகம் செய்ய முடிந்தால், அவர்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். வங்கதேச இடைக்கால அரசிற்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும்' என பைடன் உறுதி அளித்தார்.

தலையீடு

வங்கதேசத்தின் நிலவும் வன்முறையில் அமெரிக்கா தலையீடு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவே கடந்த காலத்தில் அமெரிக்க தலையீடு பற்றி சுட்டிக்காட்டினார். இந்த கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. வங்கதேசத்தில் நிலவும் சூழல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சகுரா
செப் 26, 2024 00:59

அடேங்கப்பா மாணவர்களுடைய தியாகமே தியாகம். உருப்புடுவீங்கடா


அப்பாவி
செப் 25, 2024 21:40

பயப்படாதீங்க யூனுஸ். உங்க கிட்டே துணிமணி வாங்கிக்கறோம். எங்க கிட்டேருந்து உங்க பாதுகாப்புக்காக அப்பாச்சி, துப்பாக்கியெல்லாம் வாங்கிக்கோங்க. அப்பிடியே நேட்டோவில் கூட சேர்ந்துக்கலாம்.


Rasheel
செப் 25, 2024 16:01

C I A - அமெரிக்காவின் சதி. இந்தியாவை வளர விடாமல் இன்னொரு ஆப்கானிஸ்தானை அமெரிக்கா உருவாக்குகிறது. மூர்க்கம் இன்னொரு ஏழ்மை பாகிஸ்தானை உருவாக்க தயாராகி விட்டது.


குமரன்
செப் 25, 2024 13:37

அமெரிக்கா நெருங்கி வரும்போது ரஷ்யா பக்கம் கைகொடுக்கும் மோடி ஏன் என கடந்த காலங்களில் நினைத்ததுண்டு அது ரொம்ப சரி என்று போகப்போக புரிந்தது


Ramesh Sargam
செப் 25, 2024 13:09

அது சரி, நீங்க இருக்கீங்க, நாங்க இருப்போமா..??


sathu
செப் 25, 2024 10:33

நீ இருப்படா... நீ இருப்ப நான் இருக்க வேண்டாமா? பக்கி பய பேச வந்துட்டான்....


Mohan
செப் 25, 2024 10:29

ஆஹா நம்ம பெரியண்ணன் தயவு கிடைத்துவிட்டால் இஸ்ரேல் போல் ஆட்டம் போடலாம் இந்தியாவுக்கு பெரும் தலைவலி கொடுக்கவே அங்கு ஆட்சி கவிழ்ப்பை நடத்தி உள்ளார்கள் இதில் அமெரிக்காவுக்கு லாபம் இந்தியாவுக்கும், அங்குள்ள மைனாரிட்டி ஹிந்துக்களுக்கு தான் ஆபத்து ..அதை பற்றி ஏல்லாம் அவுனுக்கு கவலை இல்லை ..இதில் நேரடி அமெரிக்காவும் பாக்கிஸ்தான் உள்ளது இனி யூனிஸ்கு புது தெம்பு கிடைத்திருக்கு வந்தவுடுனே நமக்கும் அங்குள்ள ஹிந்துக்களுக்கு ஆப்பு வைப்பான் ...இறைவன் தான் அங்குள்ளவர்களை காப்பாற்ற வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2024 10:11

பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்று புரிந்துவிட்டது .......


sankar
செப் 25, 2024 09:49

சங்க நெரிச்சிர போறான் - ஜாக்கிரதை


Almighty
செப் 25, 2024 09:35

அடுத்த சுடுகாடு அமெரிக்கா தயார் செய்கிறது. நமது நாட்டின் எல்லைகளை அகதிகள் ஊடுருவாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஊடுருவி உள்ளோரை களையெடுப்பு செய்து திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை