உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக்; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!

ஜோனாதன் டேவிட் ஹாட்ரிக்; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!

​வான்கூவர்: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் 'பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில், கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து, உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துதது கனடா. அந்த அணியின் ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்' கோல் அடித்து மிரட்டினார்.​போட்டி தொடங்கியது முதலே கனடா வீரர்கள் மைதானத்தில் 'மின்னல்' வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கத்தார் அணியின் தற்காப்பு அரணை, கனடா வீரர்கள் எளிதாக கடந்து முன்னேறினர்.16வது நிமிடத்தில், கனடாவின் சைல் லாரின் தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். கனடா அணியின் நட்சத்திர வீரர் ஜோனாதன் டேவிட், கத்தார் கோல் கீப்பருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்தபோதெல்லாம் மின்னல் வேகத்தில், கோல் போஸ்ட்டை நோக்கி நகர்த்தி, கத்தார் வீரர்களை திணறடித்தார். 29வது நிமிடத்தில் தனது முதல் கோலை போட்ட அவர், கூடுதல் நேரத்தில் (45 +3 நிமிடம்) அடுத்த கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதியில், கனடா அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும், ஆதிக்கம் செலுத்திய கனடா வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட, அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 64வது நிமிடத்தில், நாதன் சாலிபா, கனடா அணிக்காக 4வது கோலையும், 75வது நிமிடத்தில், முகமது மானாய் 5வது கோலையும் பதிவு செய்தனர்.கூடுதல் நேரத்தில் (90+2 நிமிடம்) மீண்டும் அசத்திய ஜோனாதன் டேவிட், தனது மூன்றாவது கோலை அடித்து, உலகக்கோப்பை அரங்கில் தனது முதல் 'ஹாட்ரிக்' சாதனையை பதிவு செய்தார். கத்தார் அணியால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் கனடா அணி 6-0 என்ற கணக்கில் 'இமாலய' வெற்றி பெற்றது.

​வரலாற்று சாதனை:

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடா அணி பெறும் முதல் வெற்றி. இதனை அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் கொண்டாடினர். மேலும் கனடா அணி, அடுத்த சுற்றுக்கான தனது வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nandakumar Naidu
ஜூன் 19, 2026 13:13

கத்தார் கால் பந்து வீரர்கள் முதிர்ச்சியற்ற முறையில் விளையாடினார்கள். கத்தார் வீரர்கள் அவர்கள் கோல் அடிக்க வேண்டிய பகுதிக்கு போகவே இல்லை. கனடா கோல் அடிக்கும் பகுதியில் கனடா வீரர்கள் கோல் அடிப்பதை தடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். தாங்கள் கோல் அடிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாதது போல் இருந்தது.


vijay
ஜூன் 19, 2026 10:40

இந்த ஆண்டு கோல்டன் பூட் விருதுக்கு சரியான போட்டி அமையும்


Kannan Chandran
ஜூன் 19, 2026 13:26

இந்நேரம் "ஸ்டாலின்" ஆட்சியில் இருந்திருந்தால் அவரும் இந்த வரிசையில் இருந்திருப்பார்.


புதிய வீடியோ