உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: கமலா ஹாரிஸ் திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: கமலா ஹாரிஸ் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் '' 2028 ல் நடக்க உள்ளஅதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது,'' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்கா அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த இவர் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக பணியாற்றினார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: எனது பேத்திகள் நிச்சயம் வெள்ளை மாளிகையில், பெண் ஒருவர் அதிபராக இருப்பதை பார்ப்பார்கள். மீண்டும் இந்தப் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு இன்னும் எதிர்காலம் உள்ளது என பார்க்கிறேன். தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் குறித்து நான் கணித்த அத்தனையையும் அவர் நிரூபித்து வருகிறார். டிரம்ப்பால் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வல்லவன்
அக் 26, 2025 13:20

வெளங்கீறும்


Anbuselvan
அக் 25, 2025 19:56

வாழ்த்துக்கள்


Nanchilguru
அக் 25, 2025 19:47

உங்களுக்கு எங்க ராகுல் பிரச்சாரம் செய்யாம பார்த்துக்குங்க


புதிய வீடியோ