உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தலையிட்டால் சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது.இது தொடர்பாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு மக்களுக்கு டிவி மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது: ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கு அந்நாடு தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். திணிக்கப்பட்ட போர் மற்றும் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராக ஈரான் உறுதியுடன் நிற்கிறது. யாரிடமும் சரணடைய மாட்டோம். ஈரானையும்,அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள், அச்சுறுத்தலின் மொழிக்கு ஈரானியர்கள் சரியாக பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிவார்கள். அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சரி செய்ய முடியாத அளவுக்கு பின் விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து அதிகாரிகள் முழு பலத்துடன் தங்களது பணிகளை தொடர வேண்டும். கடவுள் நிச்சயம் நம்மை வெற்றிபெறச் செய்வார். அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்த போது, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த கட்டத்தில் ஈரான் பதிலடி கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது என்பது இஸ்ரேலின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வெறிச்சோடி காணப்படும் டெஹ்ரான்: தலைநகர் டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரிதாகவே, சாலைகளில் டூவிலர்கள் மற்றும் கார்கள் செல்வதை பார்க்க முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினர் மீட்பு இதனிடையே, ஈரானுடன் மோதல் நடக்கும் நிலையில், இஸ்ரேலில் உள்ள கிரேக்கர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவர்கள் எகிப்து வழியாக பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொந்த நாட்டிற்கு கிளம்பி சென்றனர்.அண்டை நாடுகளிடம் கோரிக்கை தங்கள் நாட்டிற்குள் ஊடுருவல்காரர்கள் நுழைவதை தடுக்க வேண்டும் என தனது அண்டை நாடுகளிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லையில் நிலவும் சூழ்நிலையை ஈரான் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 09:28

நீங்கள் மற்ற முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்காவை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரே நாளில் போர் முடிந்து விடுமே. ஏதோ உலகத்துல நல்லது நடந்தா சரி


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 08:06

நீங்கள் இதற்க்கு முன்பு... நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்திய போது இனித்தது... இப்போது அவர்கள் திருப்பி அடித்தால்... கசக்கிறது.... அப்படி தானே ???


MOHAMED Anwar
ஜூன் 18, 2025 22:01

அமெரிக்காவிற்கு அடங்கி போவதற்கு அவர்கள் என்ன கோழைகளா?


Suppan
ஜூன் 18, 2025 21:57

ஈராக்குக்கு இல்லாத WMD உருட்டு மாதிரி இது "இல்லாத" அணுகுண்டு உருட்டலோ


Nesan
ஜூன் 18, 2025 20:53

சரி செய்ய முடியாத, மிகவும் மோசமான அழிவை ஈரான் சந்திக்க போகிறது. இஸ்ரேல் ஒன்னும் அண்டங்காட்சி நாடு அல்ல. அறிவாளிகள்...


GMM
ஜூன் 18, 2025 20:23

இன்று மனித சக்தியை விட தொழில்நுட்ப சக்தி அறிவது கடினம். தொழில் நுட்பம் சக்தி அறிய மூளை செயல் திறன் தேவை. தற்போது இந்தியா பாகிஸ்தானுக்கு உணர்த்தி விட்டது. ஈரானுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உணர்த்தும்.


pat150
ஜூன் 18, 2025 19:38

துலுக்கன்களுக்கு எழரை சனி confirm


MOHAMED Anwar
ஜூன் 18, 2025 22:04

துலுக்கன்கள் வீரர்கள், ஈரானியர்கள் அதை காட்டுவார்கள்.


முக்கிய வீடியோ