வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Kīlauea எரிமலை மாற்றம் மீண்டும் ஒரு அடர் மழையை லாவோஸ், தைவானுக்கு கொடுக்குமா
ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்புகள் வெளியேறி வருகின்றன.அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு, பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள இந்த தீவு, எரிமலைகளுக்கு புகழ் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டு முழுவதும் இருக்கும். இங்குள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியா ஒன்றாகும்.1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. தற்போது இந்த கிலாவியா எரிமலை வெடித்து சிதறி உள்ளது. 1,500 அடி உயரத்திற்கு கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த கால சம்பவங்கள்!
கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் வெடித்து சிதறியது. எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் சேதமடைந்தன. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வெடித்து சிதறியது. அப்போதும் பெரும் சேதம் ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் வெடித்து சிதறியது. அப்போது லேசான பாதிப்பு ஏற்பட்டது.கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த எரிமலை 30வது முறையாக வெடித்துள்ளது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை ஆராய்ந்து வருகின்றனர். கிலாவியா எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம், என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Kīlauea எரிமலை மாற்றம் மீண்டும் ஒரு அடர் மழையை லாவோஸ், தைவானுக்கு கொடுக்குமா