உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீர்ப்பளிக்க தாமதம் நீதிமன்றத்துக்கு தீ வைத்தார் வக்கீல்

தீர்ப்பளிக்க தாமதம் நீதிமன்றத்துக்கு தீ வைத்தார் வக்கீல்

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 11 மாதங்களாக நீதிபதி தீர்ப்பு வழங்க தாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற அறைக்குள் தன் இருக்கைக்கே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிந்து மாகாணம் ஹைதராபாத் நகரில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில், நிலம் தொடர்பான சிவில் வழக்கு ஒன்றை வழக்கறிஞர் சிக்கந்தர் என்பவர் நடத்தி வந்தார். நவாப்ஷா பகுதியைச் சேர்ந்த நில உரிமை தொடர்பான இந்த வழக்கில், தன் குடும்பத்தினருக்காக சிக்கந்தர் வாதாடி வந்துள்ளார். ஆனால் 11 மாதங்களுக்கு மேலாகியும் தீர்ப்பு வழங்காமல் நீதிபதி ஒத்திவைத்துக் கொண்டே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சிக்கந்தர், நீதிமன்ற அறையில் தன் இருக்கைக்கே நேற்று தீ வைத்தார். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளாலும், நீதித்துறையில் நிலவும் தேக்க நிலையாலும் தாங்கள் சிரமப்படுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !