உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: ஐ.நா.வுக்கு வெளியே முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: ஐ.நா.வுக்கு வெளியே முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக கூறி, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டம் வரும் செப்., 29ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்த சூழலில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் முகமது யூனுஸுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 2024ம் ஆண்டு பதவி விலகி பிறகு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள், முகமது யூனுஸ் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூச்சலிட்டனர். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்துவருகிறது.ஆகஸ்ட் 5ம் தேதி, 2024ம் ஆண்டு முதல் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து, பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து மதங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முகமது யூனுஸ் அதிகாரத்தை விட்டுவிட்டு செல்ல வேண்டும். வங்க தேசத்தில் தேர்தல் நடத்த வேண்டும். வங்கதேசத்தை தாலிபான் நாடாக, பயங்கரவாத நாடாக முகமது யூனுஸ் மாற்றி வருகிறார். பேரணியின் நோக்கம் மிகவும் எளிமையானது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேசத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஐநாவுக்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ManiMurugan Murugan
செப் 27, 2025 22:36

ManiMurugan Murugan அருமை


Santhakumar Srinivasalu
செப் 27, 2025 20:30

இவர்களுக்கென்று தனி நாடு ஏற்படுத்தி கொடுத்த இந்தியாவுக்கு எதிராக மக்களும் அரசாங்கமும் கொஞ்சமும் மனிதாபமானம் இல்லாமல் இருப்பது பெரிய துரோகம்!


Kumar Kumzi
செப் 28, 2025 15:16

இது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கும் மூர்க்க காட்டுமிராண்டிகளின் மதகுணம்


Svs Yaadum oore
செப் 27, 2025 12:22

திராவிடம் உங்களையும் என்னையும் என்னச் செய்ததாம்?? ....இதைத்தான் செய்தது ...அரசு பள்ளி ஒன்றில், மாணவியர் இரு குழுவாக பிரிந்து தகராறு .....ஆசிரியர் மாணவியருக்கு பாலியல் தொல்லை .............


kumaran
செப் 27, 2025 12:10

எங்கும் தவறை தவறு என்கிறார், . ஏனெனில் விட்டீல் பூச்சி விளக்கின் வெளிசத்தை பார்த்து மயங்குவதுபோல


Rathna
செப் 27, 2025 11:34

உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. இவங்களை சட்டவிரோதமாக உள்ளே விடத்தான் தேர்தல் கமிஷனை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். கள்ள வோட்டு வாங்க வோட்டு வங்கியை பலப்படுத்த வங்காளம் முதல் தமிழ்நாடு வரை கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள்


Muralidharan raghavan
செப் 27, 2025 11:09

திமுக, திருமா, வைகோ, வன்னியரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் , ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிப்பதில்லை. இதுவே இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்களே.


Svs Yaadum oore
செப் 27, 2025 10:54

பாலஸ்தீனி காஸாவுக்கு பொங்கிய சினிமா விடியல் திராவிடர் எங்கே காணோம் ??...


KumaR
செப் 27, 2025 18:32

எல்லாரும் கோபாலபுரத்துல எலும்புக்கு வரிசைல நிக்காங்க..


Svs Yaadum oore
செப் 27, 2025 10:53

பாலஸ்தீனி காசாவுக்கு திராவிட சினிமா எல்லாம் இதுக்கும் உடனடியாக அப்படியே பொங்கி அறிக்கை விடுவாங்க ...இதை கண்டித்து திராவிட அக்கவுண்ட் ரோட்டில் கவர்னருக்கு எதிராக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....


Haja Kuthubdeen
செப் 27, 2025 10:45

இது மிக மிக வருத்தமான கொடுமையான ஆண்மையில்லாத செயலாகவே உணர்கிறேன்.மதரீதியா சிறுபான்மையான மக்களுக்கு பெரும்பான்மையினர் உதவியா கருணையா இருப்பதே மனிததனம். பங்களாதேசில் சிறுபான்மையினர் கஸ்டப்படுவது அச்சுறுத்தலில் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.ஏன் இப்படி காட்டுமிராண்டிகளா மணிதன் மாறிவிட்டார்.... சமூகம் அனைத்தையும் படைத்ததே ஒரே இறைவனாகத்தான் இருக்க முடியும்.அப்ப எந்த உயிரையும் பறிக்க ஒடுக்க நினைப்பது பாவமா தெரியலையா...என் மதம்தான் பெருசு என்ற மனோபாவமே இவ்வளவு கொடுமைக்கும் காரணம். எனக்கு மத உணர்வு நிறையவே இருக்கு.


Kumar Kumzi
செப் 28, 2025 15:22

மண்டையில் எப்போதும் மதம் மட்டுமே இருக்கும்


Anand
செப் 27, 2025 10:39

இதை பற்றி இங்குள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூச் விடமாட்டானுவ, அதுவே ஹிந்துக்கள் யாராவது பதில் நடவடிக்கை எடுத்தால் எங்கே அந்த பொய்க்கோ இருக்காங்கோ,