உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இசை மழையில் நனைந்தது லண்டன்; இளையராஜாவின் சிம்பொனியை மெய்மறந்து ரசித்த ரசிகர்கள்!

இசை மழையில் நனைந்தது லண்டன்; இளையராஜாவின் சிம்பொனியை மெய்மறந்து ரசித்த ரசிகர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, தனது அண்ணன் பாவலர் வரதராஜனால் தமிழக இசை உலகுக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் அளித்த ஊக்குவிப்பால், மேற்கத்திய இசை பயிற்சியில் ஈடுபட்டு, இன்று உலக மக்களை தனது இசையால் வசியப்படுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kewun2cj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுவரை, 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த அவருக்கு, ஏற்னகவே மத்திய அரசு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி கவுரவித்துள்ளது. இதைதொடர்ந்து, 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார்.35 நாட்களில் எழுதிய இளையராஜா, சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். Eventim Apollo அரங்கத்தில் சிம்பொனி இசையை, மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அரங்கமே அதிர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Bala
மார் 09, 2025 19:43

ராஜா சார் ஒரு சுயம்பு.அவரால் இந்தியாவுக்கு பெருமை.அவர் இருக்கும் போதே பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்.அனைவரும் கமெண்ட் செய்யுங்கள்.


Bahurudeen Ali Ahamed
மார் 09, 2025 13:33

இளையராஜா ஆகச்சிறந்த இசைவித்தகர் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை ராஜா ராஜாதான் .


Gurusamy
மார் 09, 2025 12:31

Hattsoff to Our Mastero.


S.L.Narasimman
மார் 09, 2025 11:58

இங்கிருக்கும் கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை, இளையராசாவின் இசை ஞானம்.


Sridhar
மார் 09, 2025 11:47

தமிழருக்கு கிடைத்த வரப்பிரசாதம் கடவுள் நம் தமிழருக்காக அனுப்பிய தூதர் இன்னும் 1000 வருஷம் ஆனாலும் இளையராஜா மாதிரி யாருக்கும் கிடய்க்காது நாம் செய்த அதிர்ஷ்டம்


Ravi Prasad
மார் 09, 2025 11:39

King of World Music


Ramesh Sargam
மார் 09, 2025 11:36

இதெல்லாம் ஓகே. ஆனால் ராஜா ஒரு எம்.பி.யாக மக்களுக்கு எந்தவிதத்தில் உதவி?


MUTHU
மார் 09, 2025 12:56

ராஜ்யசபா MP என்பது ஆட்டுக்கு தாடி மாதிரி.


நான் ஹிந்து
மார் 09, 2025 13:39

இருக்கும் எம் பீ களால் என்ன நன்மை கிடைத்து விட்டது என்றும் நண்பர் கூறவும்


பேசும் தமிழன்
மார் 09, 2025 15:11

நம்ம ஊரில் இருந்து போன 40 MP க்களும்... வெறும் பாராளுமன்ற கேன்டீன் டோக்கன்கள் என்று மக்கள் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ???


Sivagiri
மார் 09, 2025 11:22

இங்கே , பாரதத்தின் , பலவிதமான பாரம்பரிய சங்கீத வாத்தியங்கள் சேர்ந்து , ஒரு கலவையான இசை வடிவ வாசிப்பு ,, ஜுகல்பந்தி என்று பிரபலமாக இருக்கிறது , தனியாக ஒரே ஒரு இசை கருவி மட்டும் வாசிப்பதும் இருக்கிறது , அந்த வகையில் மேற்கத்திய . . .


MUTHU
மார் 09, 2025 10:26

படைப்பின் முதல் ஆரம்பமே தோன்றா நிலையில் உள்ள நாதம். அது அ உ ம் என்ற மூன்றெழுத்துக்களின் தொடர்ச்சியான ஒரு வித அதிர்வு. அதுவே பிராணனின் அதிர்வு. அதுவே பல்வேறு ஒலிகளின் அடிப்படை. அதனை தொடர்ந்து வரும் பல்வேறு ஒலிகள். ஒளி கூட ஒலியினால்-இசையினால் உண்டான படைப்புதான். அதன் விளைவு மனதின் உருவாக்கம். அதனை தொடர்ந்தே தோற்றத்திற்கு வரும் பல்வேறு படைப்புகள் முதலியன. இதனை கண்பார்வையற்ற பீத்தோவன் எப்படியோ உணர்ந்திருக்கிறார். முன்பும் பல்வேறு ஞானியார் உணர்ந்திருந்தாலும் அதனை மற்றவர்களுக்கும் சொல்வதில் தோல்வியடைந்தனர். ஆனால் பீத்தோவன் அதனை மற்றவர்களுக்கு எழுதிக்காட்டியுள்ளார். இன்றைய அறிவியலும் படைப்பின் ஆரம்பம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கின்றது. படைப்பின் ஒரு நாத நிலை தான் சிம்பொனி.


பேசும் தமிழன்
மார் 09, 2025 10:16

தமிழன் என்று சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா !!! இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை